உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 145 -ஒத்திப் போடறது-எல்லாம் நம்மகிட்டக் கிடையாது. உங்ககிட்ட ஒரு நபருக்கு ஐநூறு ரூபாய் கைநீட்டி. வாங்கினாப் பேப்பர் திருத்தறவங்களுக்குப் போக, வேண்டிய ஷேர் ஒரு நயர் பைசாக்கூடக் குறையாமக் கரெக்டாப் போய்ச் சேர்ந்துவிடும். "சிண்டிகேட் சிதம்பர நாதன் சார் குறிச்சிக் கொடுத்த நிம்பரா? கவலையில்லாமச்' செய்துடலாம். வரவேண்டியது ஒழுங்காகக் கவர்லே வச்சு வந்திடும்’னு யூனிவர்ஸிடி எக்ஸாமினர்ஸே தங்களுக்குள்ளே என்னைப்பத்திச் சிலாகிச் சுப் பேசிப்பாங்கன்னாப் பார்த். துக்குங்களேன்...' 17 படிப்பு-அறிவு-இவை விசாலமடைய விசால மடையத்தான் சிறும்ை. லஞ்சம், ஊழல் இவையெல்லாம் ஒழியும் என்பார்கள். படிப்பிலேயே சிறுமை, ஊழல் லஞ்சம் எல்லாம் வந்து சேர்ந்துவிட்டால் என்ன செய்வது? கங்கையே சாக்கடையாகிவிட்டால் அப்புறம் என்ன வழி: கங்கையையே சாக்கடையாக்கிவிட்ட தன் பெருமையைத். தான் சிதம்பரநாதன் அப்போது சுதர்சனனிடம் விவரித்துக்க கொண்டிருந்தார்,

  • உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநில்ை முன்ரியாது கற்றல் நன்றே’’

என்ற புறநானூற்றுப் பாண்டியனின் கல்வி பற்றிய பாட. லுக்கு இப்போது குறும்பாகவும் வக்கிரமாகவும் புதுப் பொருள் கொள்ள வேண்டும்போல் தோன்றியது சுதர்சன னுக்கு. உறுபொருள் கொடுக்கும் இடமாக சிண்டிகேட் சிதம்பரநாதன் காட்சியளித்தார். உற்றுழி உதவுகிற பணி: யையும் செய்து கொண்டிருந்தார். - - - - உற்றுழி' என்பதற்கு மார்க் குறையும்போது என்று: அர்த்தம் போலும். -