நா. பார்த்தசாரதி I 3 நான் இங்கிலீஷ் நடத்தட்டுமா?" 'நீங்க எப்பிடி சார் நடத்த முடியும்? தமிழ்ப் பண்டிட் இங்கிலீஷ் நடத்தலாமா?" தமிழ்ப் பண்டிட் தமிழ் மட்டும்தான் நடத்தணு மாக்கும்?" - 'நீங்க ஜாலியா எதினாச்சும் கதை சொல்லுங்க ..&rrif..."' . . . . . "தமிழ்ப் பண்டிட் கதை மட்டும். சொல்லலா மாக்கும்....? - - - 'நீங்க கதை எல்லாம் எழுதறவரு, அதனாலே நல்லாச் சொல்லுவீங்க சார்...' - - - "எழுதறது வேறே, சொல்றது வேறே. எழுதிட்டா நல்லாச் சொல்விட முடியும்னு இல்லே தம்பிகளா...' 'நீங்க ஃபோர்த் ஃபாரம் பி செக்ஷன் நான் டீடயில்ட் கிளாஸ்லே அருமையான் கதையெல்லாம் சொல்விங்கன்னு என் தம்பி சொல்லியிருக்கான் சார்." இன்னிக்கு இங்கே நான் கதை கிதை சொல்ல மாட் டேன். நீங்க ஏதாவது சத்தம் போடாமப் படிச்சிட்டிருங்க. நான் என் வேலையைப் பார்க்கிறேன்...” . ... " மறுபடியும் தலைமையாசிரியர் மேற்பார்வைக்காகச் சுற்றி வரும்போது அவரிடம் மாட்டிக் கொள்வோம் என்ற பயம் இப்போது சுதர்சனத்துக்கு ஒரு சிறிதும் இல்லை. மாணவர்களை அமைதியாக அவர்கள் பாடத்தைப் படிக்கச் சொல்லிவிட்டு அரைகுறையாக நிறுத்தி வைத்திருந்த தன் கவிதையை மேலும் தொடர்ந்து எழுதலானான் அவன். பெண்களின் டிரில் பீரியடு முடிகிறவரை தலைமை யாசிரியர் நிச்சயம் விளையாட்டு மைதானத்தில்தான் இருப் பார் என்பதில் அவன் மணம் முழு நம்பிக்கை வைத் திருந்தது.
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/15
Appearance