宣子á பொய்ம் முகங்கள் நிறைய இருக்கிறது என்பதைச் சுதர்சனன் புரிந்து கொண் டிருந்தான். படித்தவர்கள் இதை விசாறித்தறிவதற்குப் பல உத்திகள், தொழில் முறைகள், அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதைக் கூட அவன் அறிந்து வைத்திருந்தான். விசாரிக்கிறவர் தனக்கு நன்றாக ஊர், பேர் குலம், கோத்திரம் எல்லாம் தெரிந்த ஒரு நபரின் பெயரைக் குறிப் பிட்டு, "அவருக்கு நீங்க ரிலேஷனுங்களா?' என்று கேட்பது ஒரு முறை. 'இல்லை' என்று பதில் கிடைத் தாலும் "ஆமாம்” என்று பதில் கிடைத்தாலும் ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிந்துவிடக் கூடும். இல்லை. என்று பதில் கிடைத்தால் அவர் எந்தச் சாதி இல்லை: என்ற விவரமாவது புரியும்' "ஆமாம் என்று பதில் கிடைத் தாலோ எந்தச் சாதி என்பதே நேரடியாகத் தெரிந்துவிடும். இப்படி மாற்றி மாற்றி இரண்டு மூன்று தெரிந்த பெய்ர் களைச் சொல்லி அவருக்கு உறவா? இவருக்கு உறவா? என்று கேட்டாலே சாதி தெரிந்துவிடும். அதிலும் முடியா விட்டால், 'உங்க ஃபாதர்...? என்று கேட்டு நிறுத்தினால் நாராயணப்பிள்ளை அல்லது குப்புசாமி முதலியார் அல்லது கிருஷ்ணையர் என்று பதில் வந்து சாதியைக் காட்டிக் கொடுத்துவிடும். முந்திய தலைமுறை மனிதர்கள் பெயர் சாதியோடுதான் வரும் என்ற நம்பிக்கை அல்லது பெரியவர் கள் பெயரை மரியாதை இல்லாமல் நாராயணன், குப்பு சாமி, கிருஷ்ணன் என்று மொட்டையாகச் சொல்லத் துணிய மாட்டார்கள் என்ற தம்பிக்கை காரணமாக இருக்க லாம். படித்தவர்களிடம் மறைந்துள்ள காட்டுமிராண்டித் தனங்களில் இதுவும் ஒன்று என்பதைப் புரிந்துகொண்டிருந்த சுதர்சனம் அப்போது சிண்டிகேட் சிதம்பரநாதனை நிமிர்ந்து பார்த்து, - - - 'உங்களுக்கு என்ன தெரியனும் நான் என்ன சாதின்னு, தானே தெரியணும்? தைரியமாத்தான் கேளுங்களேன். ஏன் பூசிமெழுகlங்க? எங்கப்பா நாயுடு; எனக்குச் சாதியிலே நம் பிக்கை கிடையாது. என்றான். . . . r
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/152
Appearance