உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 151 'இல்லே...நான் விசாரிக்க வந்தது என்னன்னா...' எதையோ மழுப்பினாற் போல இழுத்தார். சிதம்பரநாதன். தனது முயற்சியை-அதன் இரகசியமான உத்தியைச் சுதர் சனன் கண்டுபிடித்து விட்டானே என்று கூச்சமாக இருந். திருக்க வேண்டும் அவருக்கு. மூஞ்சியில் அடித்ததுபோல் அவன் அந்தப் பதிலைக் கூறிய பின்னர் அவனிடம் மேற் கொண்டு பேசுவதற்கு அவர் தயங்க வேண்டி விந்தது. இவ னிடம் உஷாராக இருக்க வேண்டும்' என்ற உணர்வும் அவருள்ளே மெல்லத் தோன்றியது. - 18 பகல் ஒரு மணி சும்ாருக்கு சிண்டிகேட் சிதம்பரநாதன் சுதர்சனனிடம் சொல்லிக் கொண்டு விடைபெற்றுப் போய்ச் சேர்ந்தார். சுதர்சனனுக்குப் பசி எடுத்தது. ரகு வருவானா அல்லது தானே தனியாகப் பகலுணவுக்குச் செல்வதா என்று தயங்கினான் சுதர்சனன். மெஸ்ஸகுக்குப் போவதர் னால் புதியவனாகிய தான் மட்டும் தனியே போவது சரியா :பிராது என்று பட்டது அவனுக்கு. - , - ரகுவுக்காகக் கால் மணி நேரம் காத்துப் பார்த்த பின் அவன் வந்தால் அவனோடு மெஸ்ஸஅக்குப் போவது, இல்லையென்றால் எங்காவது சாப்பாட்டு ஹோட்டலில் போய் உண்பது என்று முடிவு செய்து கொண்டு காத்திருந் தான். ஆதர்சபுரம் நண்பர்கள் இரண்டொருவருக்குக் கடிதம் எழுதினான். - நல்லவேளையாக அவன் சாப்பாட்டுக்குப் புறப்படுவ தற்குள் ரகுவே வந்துவிட்டான். - - 'தலைவர் உன்னைப்பத்தி ரொம்ப வருத்தப்பட்டார். அவரோட அருமை பெருமைகளைப் பத்தி இப்போ நீ உதாசீனப்படுத்தலாம். ஆனால் நீயே போகப் போகத்