உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

卫5别 பொய்ம் முகங்கள் தெரிஞ்சுக்க முடியும்னு நினைக்கிறேன்' என்ற வார்த்தை களைச் சுதர்சனனிடம் சொல்லிக் கொண்டே நுழைந்தான் ரகு. சுதர்சனன் ரகுவை உணவுக்குச் செல்லத் துரிதப் படுத்தினான்:- - - "அதைப் பத்தி இப்போ என்ன? முடிஞ்சு போன் விஷயத்தை விட்டுடு. எனக்குச் சாப்பிடப் போகணும். பசிக்குது. உனக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கேன்...” "இருந்து நிதானமா எல்லோரும் இங்கேயே சாப்பிட்டு விட்டுப் போகணும்னு எங்களைத் தலைவர் கெஞ்சினாரு, தாங்க தான் அவருக்கு வீண் சிரமம் எதுக்குன்னு புறப்பட்டு வத்துட்டோம்.' : - "நீ வர்ரத்துக்குக் கொஞ்சநேரம் முன்னாடி வரை சிண்டிகேட் சிதம்பரநாதன் உன்னைத் தேடி வந்து காத்துக் கிட்டிருந்தாரு. இப்பத்தான் சொல்லிட்டுப் புறப்பட்டுப் போனாரு. ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம்......' "அப்படியா? அவரை நேரே அப்படியே தலைவர் வீட்டுக்குப் புறப்பட்டு வரச் சொல்லக் கூடாதோ? இன்னிக்குத் தலைவர் பிறந்தநாள்னு நீ சொல்லியிருந்தா அவரே அங்கே கிளம்பி வந்திருப்பாரே அப்பா?' ரகுவின் தலைவரைப் பற்றிய புலம்பல் ஒயவே ஓயாது. போலிருந்தது. அது ஒருவிதமான பைத்தியமாகவே அவனைப் பிடித்திருப்பது போலத் தோன்றியது. மூச்சுக்கு. முந்நூறு தரம் தலைலர் தலைவர் என்றே அனற்றிக். கொண்டிருந்தான் அவன். சமணரைக் கழுவேற்றியது, திருநாவுக்கரசரைக் கல் தூணில் பூட்டிக் கடவில் தள்ளியது போன்ற மதவெறிகளைவிட மோசமான மதவெறிகளின் வரிசையில் காரணமில்லாத இக்காலத்து வீரவணக்கத்தை யும் சேர்த்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. எதிலும் வீரவணக்கம் புரிகிறவர்கள் மூளை வளர்ச்சி குன்றிப் போய்க் குருட்டுத்தனமாக மாறி விடுகிறார்கள் என்பதற்கு. திறைய உதாரணங்களைச் சுதர்சனனால் காணமுடிந்தது.