உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - . 153 சுதர்சனனே அப்படி இளமையில் சில விர வணக்க மனப் பான்மைகளிலே அழுத்தமாகச் சிக்கியிருந்தவன்தான். அந்த விர வணக்கக் காலங்களில் தான் எப்படித் தன் கருத்துக்குச் சாதகமில்லாத கோணத்திலிருந்து ஒன்றைப் பார்ப்பதைத் தவிர்த்திருக்கிறோம் அல்லது ஒதுக்கியிருக் கிறோம் என்பது இப்போது அவனுக்கே நினைவு வந்தது. . - 'மெஸ்ஸிலேருந்து அந்தப் பொண்ணு வந்து சாப்பிடக் கூப்பிட்டிச்சுப்பா அங்கேயே சாப்பிடப் போகலாமா? வேறெங்கேயாவது.- என்று சுதர்சனன் ரகுவின் கவனத்தைத் தலைவர் புராணத்திலிருந்து மீண்டும் திசை திருப்ப முயன்றான். . . ஆனால் சுதர்சனனின் முயற்சி அவ்வளவு சுலபமாகப் பலிக்கவில்லை. சாயிபாபா பக்தர்கள் எப்படி எல்லா நேரமும் சாயிபாபாவின் விநோத அதியற்புதச் செயல் களைப் பற்றிய சம்பவங்களையே எடுத்துச் சொல்லியும் விவரித்தும் விளக்கியும் மகிழ்கிறார்களோ அதே போலத் "தலைவர்கள்’ என்ற நவீன இந்திய மேல் தட்டு வர்க்கத் தின் தொண்டர்களும் சதாகாலமும் தலைவர் தம் பெருமை யைச் சொல்லி மகிழ்கிறவர்களாகவே இருந்தார்கள். 'நம்ம மெஸ் இட்வின்னாத் தலைவருக்கு உயிர்ப்பா! எத்தனையோ நாள் என்னை வாங்கியாரச் சொல்லிச் சாப்பிட்டிருக்காரு'-என்று மெஸ் பற்றிய நினைவிலும் தலைவரையே ஞாபகப்படுத்திக் கொண்டு ஆரம்பித்து விட்டான் ரகு, சுதர்சனனுக்கு ஒரே சலிப்பாயிருந்தது. தேசத்தில் இன்று தலைவர் பக்தி-சாயிபாபா பக்திஎல்லாம் ஒரே மாதிரித்தான் இருந்தது. சுதர்சனனால் அதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. மறுபடியும் ரகுவிடம் தனக்குப் பசியாயிருப்பதையும், மெஸ்ஸஅக்குப் போகலாமா என்பதையும் நினைவூட்டினான் சுதர்சனன். "கொஞ்சம் பொறுத்துக்க தலைவர் வீட்டிலிருந்து நண்பர்கள் ரெண்டு பேர் வருவாங்க" அவங்க வந்தப்பறம்