பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.56 - பொய்ம் முகங்கள் சுதர்சனன் பொன்னழகை நிமிர்ந்து பார்த்தான் . சுயமரியாதை இயக்கத்தின் நேர்மைப் பிடிவாதமும் முரண்டு களும் இளகிப் போய் அவர் முகத்தில் இப்போது அசடு வழிய ஒரு புது மிலுமினுப்பு வந்திருப்பது தெரிந்தது. - 'ஊரு வீடுவாசல் இயக்கத்தை எல்லாம் விட்டிட்டு இதுக்கு எப்படி நீங்க வந்திங்க?" - 'இதிலே என்ன தப்பு: ஐயாவே, நம்பளவங்க ராஜ்யம் பண்றாங்க. அவங்க நல்லது பண்ணினாலும் தப்பு பண்ணினாலும் நாம அவங்களை ஆதரிக்கனும்’னு சொல் விட்டாாே: லஞ்சமோ ஊழலோ-எது பண்ணினா என்னங்க? நம்மளவனுகளும் நாலுபேர் பணக்காரனா வந்தால் நல்லது தானே?’’ இப்படி அவர் கேட்டார். 'தப்புப் பண்றவங்க நமக்கு வேண்டியவங்களா இருந் தால் அனுமதித்து ஆசி கூறி விட்டுடறதும் நமக்கு வேண்டா தவங்களா இருந்தால் எதிர்த்துத் தாக்கிப் போராடறதும் தான் இந்த நாட்டிலே கட்சி அரசியல்னு ஆணப்புறம் இதைப் பத்தி ஒண்ணும் பேசறத்துக்கு யோக்கியதை இல்லே அண்ணே...' "நீங்க என்ன சொல்றீங்க சுதர்சனம்?" 'தெளிவாச் சொல்லணும்னா இந்த விஷயத்திலே ஐயாவையோ உங்களையோ நான் ஆதரிக்க மாட்டேன். முதல்லே ஒரு சுயமரியாதைக்காரன் என்றும் எதற்கும். மடங்காத நேர்மையாளனாக இருக்கணும். அந்த நேர்மை என்னிக்குப் போச்சோ அன்னிக்கே சுயமரியாதை இயக்கமும் போச்சு.' 'அதெப்படி? இப்பத்தான் நம்ம இயக்கத்துக்கு ஒவ் வொண்ணா வெற்றிமேலே வெற்றியே கிடைச்சிட்டிருக்கு, தம்மளவங்களே இப்போ நாட்டை ஆளுறாங்க. நமக்கு வேண்டியவங்களுக்குச் சலுகை, காண்ட்ராக்ட் எல்லாம் நிறையக் கிடைக்குது. இதைப் போயி குறை சொல் lங். களே அண்ணே! இதோ பாருங்க... நீங்களோ ஆதர்சபுரத்