பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i80 பொய்ம் முகங்கள் கொண்டிருக்கிற சமூகத்துக்கு எப்போது யாரால் விடிவு வரப்போகிறதோ என்று குமுறியது சுதர்சனனின் உள்ளம். மேடையில் தலைவருக்குத் தொண்டர்கள் ஒவ்வொரு வார்டின் சார்பிலும் மாலை அணிவித்துக் கொண்டிருந் தார்கள். மொத்தம் பத்தே மாலைகளை வைத்துக் கொண்டு நூறு பேர் மாற்றி மாற்றித் தலைவருக்குப் போட்டுக் கொண்டிருந்தார்கள். முதல் நபர் அணிவித்த மாலையைத் தலைவர் கழற்றி மேஜை மேல் வைத்ததும் பின்புறமிருந்து இரண்டு கைகள் நீண்டு அந்த மாலையை எடுத்தன. அடுத்த மாலைக்கும் இதே கதி. இந்த ரகசியத் தின் கீழ்ப் பத்தே மாலைகளைப் பத்துத் தடவை மாற்றி மாற்றிப் போட்டால் நூறு பேர் மாலை போட்ட பெருமை வந்துவிடும். ஆனால் முடிவில் மாலைகளை எண்ணிப் பார்த்தால் மட்டும் பத்து மாலைகள்தான் இருக்கும். சிசின்வருக்கு இது தெரியாமல் இருக்க நியாயமில்லை. கழுத்தில் விழுந்த மாலை ஒவ்வொன்றையும் தாம் கழற்றி வைக்கக் கழற்றி வைக்க அவை வைத்த சுவடு தெரியாமல் மாயமாய் மறைந்து மறுபடி புது மலையாய்த் தம் கழுத் துக்கே திரும்ப வருவதும் அவர் அறிந்த உண்மையே. பல ஆண்டுகளுக்கு முன் கட்சியின் சிறப்புக் கூட்டங்களில் மாலை சம்பந்தமான இந்தச் சிக்கன நடவடிக்கையைத் தொண்டர்களுக்கு அவரே கற்றுக் கொடுத்ததாகச் சொல்லுவார்கள். - . . அங்கே மேடையில் தலைவருக்கு மாலை போட வருகிற ஒவ்வொருவனுக்கும் மாலை போட வேண்டும் என்கிற நோக்கத்தைவிடத் தான் ஓர் ஐந்து அல்லது பத்து நிமிஷம் எப்படியாவது தட்டுத் தடுமாறி பேசிவிட வேண்டும் என்று முயல்வதே துருத்திக் கொண்டு தெரிந்தது. சிலர் வாய்ப் பதற்றத்தில் பல சொற்களை நீட்டி முழக்கிப். பேசி முடிவில் தலைவருக்கு இம்மலர் மாலையை மாணிக்க மாலையாகப் பாவித்து அணிவிக்கிறேன் என்று கூற தி னைத்து, 'இம்மாலைக்குத் தலைவரை மாணிக்கமாகப்