பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 星6座 பாவித்து அணிவிக்கிறேன்" என்று உளறிக் கொட்டினார் கள். உண்மையில் பார்த்தாலும் அந்த வார்த்தைகளே சரியாயிருந்தன. அவர்கள் தலைவருக்கு மாலையணிவிக்கவில்லை. மாலைகளுக்குத் தான் தலைவரை அணிவித்துக் கொண்டிருந்தார்கள். போகிற வேகத்தைப் பார்த்தால் தலைவரின் அடுத்த பிறந்த தினத்திற்குள் பத்து மாலை களுக்குப் பதில் ஒரே மாலையையே நூறு பேர் எப்படி மாற்றி மாற்றிப் போடுவது என்ற உத்தியைக் கண்டுபிடித்து விடுவார்கள் போலிருந்தது. திடீரென்று ஓர் ஆள் ஒரு வெள்ளாட்டுக் குட்டியும்: கையுமாக மேடையில் ஏறி மைக் முன் வந்தான். ஆட்டுக் குட்டி மேடையலங்கார வெளிச்சங்களில் மிரண்டு அம்மே” என்று கத்தியது. "தலைவருக்குப் பதினேழாவது வட்டத். தின் சார்பில் இந்த ஆட்டுக் குட்டியை அளிக்கிறேன். என்றான். தலைவர் அதை அணைத்தாற்போல் வாங்கிப் பக்கத்திலிருந்த ஆளிடம். 'பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வை' என்று சொல்லிக் கொடுத்தார். அது மைக்கில் எல்லோருக்குமே தெளிவாகக் கேட்டது. அடுத்து மற்றொருவன் தலைவரிடம் இரண்டு முயல் குட்டிகளை அளித்தான். இந்த விவகாரங்கள் முடியவே இரவு எட்டு மணி வரை ஆகிவிட்டது. - - ஒரு சிர்க்கஸ் காட்சியைப் பார்ப்பதுபோல் சுதர்சனன் மணலில் அம்ர்ந்து இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டி , ருந்தான். கிராமத்துக் காவல் தேவதைகளுக்கு ஆடு மாடு" கோழி என்று நேர்ந்து கொண்டு பலி கொடுக்கும் வழக்கம் ஏனோ அவனுக்கு அப்போது நினைவு வந்தது. - தலைவரின் பிறந்த தினப் பாராட்டு விழாப் பொதுக் கூட்டம் இரவு பத்தரை மணிக்கு முடிந்தது. ரகுவும்: நண்பர்களும் மேடையிலிருந்து கீழே இறங்கி வர பதினொரு மணி ஆகிவிட்டது. - . சுதர்சனன் அதுவரை காத்துக் கொண்டிருந்தான்.