பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பொய்ம் முகங்கள் வருஷம் நல்ல ரிஸ்ல்ட் காமிச்சிட்டோம்னா அடுத்தவருஷம்: தானா நிறைய ஸ்டூடண்ட்ஸ் வந்து சேருவாங்க.' - 'ஏன்? சிண்டிகேட் சார் தயவு இல்லாமல் - ஸ்டூடண்ட் ஸ்-க்கு நல்லாக் கோச்-அப் பண்ணியே நாம ஜெயிக்க வைக்கலாம். எனக்கு அந்த நம்பிக்கை உண்டு. நாம்: பட்டம் பெறுவதற்குக் கல்வியின் ஏஜெண்டுகளாகச் செயல். படக் கூடாது. கல்வியை அறிமுகப்படுத்தும் போதகர் களாகச் செயல்பட வேண்டும் ரகு!' - இப்படி எல்லாம் லட்சியம் பேசிக்கிட்டிருந்தோம்னா டுட்டோரியல் காலேஜ் நடத்த முடியாது. ஏதாச்சும் ஆசிரமம் ஆரம்பிக்க வேண்டியதுதான்.' "அதாவது ஒழுங்காக இருந்தால் கெடுதல் என்கிறாய். ஒழுங்கின்மையை வேகமாகக் கற்றுக் கொண்டும் கற்பித்தும். வாழ்ந்தால்தான் லாபம் சம்பாதிக்கலாம் என்கிறாய்...' சுதர்சனன் இப்படிக் கோபமாகக் கேட்டபோது ரகு. சிரித்துக் கொண்டே, - - - "நான் அப்படிச் சொல்லவில்லை. அப்பா! உலக அனு: பவம் அப்படிச் சொல்லுகிறது. இலட்சியத்துக்கும் அனுபவ. நடைமுறைக்கும் நடுவே இருக்கும் இடைவெளி பெரியது: தான்! அதற்கு நாம் என்ன செய்வது? - 20 வெளியே தெரியாமல் உள்ளுற சகு'வுக்குள் இருக்கும்: வியாபார மனப்பான்மை சுதர்சனனுக்குத் தெளிவாகவே புரிந்தது. கல்வியையும் ரேட் பேசி விற்கவும், வாடகைக்கு விடவும், தவணை முறையில் செலவாணி செய்யவும்தான் ரகு தயாராக இருந்தானே ஒழியக் கற்பித்தலை முக்கிய மானதாகவும் இதர அம்சங்களை இரண்டாம் பட்சமாக்' வும் கொண்ட ஒரு நல்ல எண்ணம் ரகுவிடமே இல்லை.