பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்த்சாரதி. 芷5 லுக்கு ஆச்சரியமாயிருந்தது. ஆனால் தான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் இதே புலிக்குட்டி தன்னிடம் உரையாடிய' ஓர் உரையாடலை சுதர்சனன் இன்னும் மறத்துவிட வில்லை. பள்ளிக்கூட அலுவலக அறையில் ரைட்டர் நரசிம்மலுநாயுடு. இவர்தான் புது ஜூனியர் தமிழ்ப் பண்டிட்- என்று சீனிவாச ராவுக்குச் சுதர்சனன்ை அறிமுகப்படுத்தியிருந்தார். அதோடு சுதர்சனன் தமிழ் வித்வான் தேர்வில் மாகாணத்திலேயே முதலாவதாகத் தேறி ஆயிரம் ரூபாய்ப் பரிசு பெற்றிருப்பதையும் அவர் புலிக்குட்டியிடம் சொல்லியிருந்தும், நீங்க நாயுடுவா மிஸ்டர் சுதர்சனன்? மனவாடு...அதான் நரசிம்மலு நாயுடு. படுகுவியா அறிமுகப்படுத்தறாரு...' என்று ராவ் பதில் கூறியிருந்தார். தான் நாயுடுதான் என்பதைச் சீனிவாச ராவ் கண்டுபிடித்துவிட்டதில் சுதர்சனனுக்கு வருத்தமோ வெட்கமோ ஒன்றுமில்லை என்றாலும் ராவ் முதல் சந்திப் பிலேயே தன்னிடம் மிகவும் கொச்சையாக நடந்துகொண்டு: விட்டதாகத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. அப் போதும் அதற்கு முத்திய ஆண்டுகளிலும் ஆதர்சபுரம்: ஜமீன்தார் ஹைஸ்கூல் நிர்வாகிகளாக நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்களே தொடர்ந்து இருந்து வந்ததால்தான் சீனிவாசராவ் இப்படிச் சொல்லியிருந்தார் போலும். ஆனாலும் அவர் சொல்லிய விதம் ஒரு தினுசாயிருந்தது. நிர்வாகி எந்த சமூகத்தை சேர்ந்தவரோ அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே சலுகை அதிகம் என்று ஒரு வம்பு பேசப் பட்டாலும், உண்மையில் அப்படி எதுவுமில்லை. தலைமை யாசிரியர் வாசுதேவன் வைஷ்ணவ ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்தவர். ராவ்-கன்னடக்காரர். வேறு சிலரும் இப்படிப் பலவிதமாக இருந்தார்கள். ஆனாலும் வம்பு என்னவோ பேசப்பட்டது. வம்புக்குக் காரணங்களும் கற்பிக்கப் பட்டன. தஞ்சை நம்மாழ்வார் நாயுடு குமாரர் ராமாநுஜலு: நாயுடு என்பதாகத் தன் தந்தை காலத்தில் சாதி, ஊர். தகப்பன் பெயர்களைச் சேர்த்து எழுதுவதே மரியாதை, ன்ன்று கருதப்பட்டு வந்தது போலன்றிப் பெயரைச் சுருக்கி