1 68- - பொய்ம் முகங்கள் கொடுத்துவிட்டான் ரகு. அதில் சுதர்சனனின் மாதச் சம. பளம் ரூபாய் ஐநூறு என்று தெளிவாகக் குறித்திருந்தான். அதை வாங்கிப் படித்த உடனே சுதர்சனன், "சும்மா ஒரு விம்புக்காக ஐநூறு அறுநூறுன்னு சொல்லிப் போட்டு அப்புறம் நீ சங்கடப்படக் கூடாது? எனக்கு அவ்வளவு கொடுத்தாகணும்னு அவசியம் இருக்கா, அவ்வளவு கொடுக்க உனக்குக் கட்டுபடி ஆகுமான்னு பார்த்துச் செய். அவசரப்படாதே. எனக்குப் பெரிசாச் சம்பாதிக்கணும்னு ஒண்னும் அரிப்பு இல்லை. முடையும் இல்லை." . - ... : "சும்மா இருக்கட்டும் சுதர்சனம்! ஐநூறுக்குக் குறைஞ்சு கொடுத்தா அது சம்பளமே இல்லை. ஐநூறு ரூபாயாவது கொடுக்க வேணாமா உனக்கு?’’ "முடிஞ்சாக் கொடு. ஜம்பத்துக்காகக் கொடுத்துவிட்டு அப்புறம் நஷ்டப்படாதே ரகு!' - இல்லே இருக்கட்டும். உனக்குத் தரக்கூடியது. எதுவும் வீண் போயிடாது அப்பா...' . . மறுபடியும் மறுபடியும் நண்பன் ரகு சுற்றி வளைத்துப் பேசிக் கொண்டிருந்தானே ஒழிய வெட்டு ஒன்று துண்டு. இரண்டாகப் பேசுவதற்கு அவனால் முடியவில்லை என்பது சுதர்சனனுக்கே புரிந்தது. - - அந்த டுட்டோரியல் காலேஜில் மொத்தம் எட்டுப் பேர் வேலை பார்த்து வந்தனர். ரகுதான் பிரின்ஸிபால் அண்ட் டைரக்டர். ஒரு கிளார்க், ஒரு அகௌண்டெண்ட். மற்ற ஐந்து பேரும் பார்ட்-டைம் விரிவுரையாளர்கள். மாணவர்களுக்குத் தொகை-டியூஷன் ஃபீஸ் என்ற பெயரில் மொத்தம்ாக ஒரு பரீட்சைக்கு இவ்வளவு என்று. . நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்தத் தொகைக்கு ஈடாக சைக் ளோஸ்ட் செய்த நோட்ஸும் குறிப்புக்களும் ஒவ்வொரு மாணவனுக்கும் தனித் தனியே தரப்பட்டன. பரீட்சை
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/170
Appearance