பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 169 களில் எந்த விதத்திலேனும் மாணவர்களை வெற்றி பெற வைக்கும் உத்தரவாதமும் முன்கூட்டியே அளிக்கப்பட்டது. இந்த உத்தரவாதமும் ரகுவின் செல்வாக்கும் அங்கே சேரும் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. ரகு நடத்தி வந்த பயிற்சிக் கல்லூரியின் வெற்றி இரக சியமே இதில்தான் அடங்கி இருந்தது. ரகுவின் அர்சியல் தொடர்புகளுக்கும் அவனுடைய தொழில் வெற்றிக்கும் சம்பந்தம் இருந்தது என்றே சொல்ல வேண்டும். - சுதர்சனன் அந்தப் பயிற்சிக் கல்லூரியில் வேலை பார்க்மச் சம்மதித்தான். ஆனால் ரகு குறிப்பிட்டிருந்த சம்பளத் தொகையை அப்படியே ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி காட்டவோ, குறைவாகக் கிடைக்குனானால் அதற்காக வருத்தப்படவோ அவன் தயாராயில்லை" அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒரு வருமானமும் சுதந்திரமான போக்கிற்குப் பங்கமில்லாத ஒரு நிலைமையையும்தான் அவன் விரும்பினான். இந்த எண்ணத்தோடுதான் ரகுவிடம் வேலை பார்க்க அவன் ஒப்புக்கொண்டும் இருந்தான். o .* முறையான கல்லூரி, பள்ளிக்கூடங்களுக்கும் இப்படிப் பயிற்சிக் கல்லூரிக்கும் கற்பிக்கும் முறைகளில் நிறைய வித்தி யாசம் இருக்குமென்று தோன்றியது. இங்கே சொல்லிக் கொடுப்பதைவிட அதிகமாகப் பரீட்சைக்குத் தயாரிக்க வேண்டியிருக்கும் என்று தோன்றியது. கற்பிப்பதைவிட மாணவர்களுக்கு அதிகமாக நோட்ஸ் தயாரித்து எழுதிப் போட வேண்டும் என்றும் தோன்றியது. - 21. சுதர்சனன் தன்னுடைய தனிப் பயிற்சிக் கல்லூரி ஆயிலேயே வேலை பார்க்க இசைந்தது. ரகுவுக்கு ஒரளவு. மகிழ்ச்சியாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். தனிப் பயிற்சிக் கல்லூரிக்கு முக்கியம் மாணவர்களைக்