பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பொய்ம் முகங்கள் கவரும் சிகப்புத் தன்மை வாய்ந்த ஆசிரியர்களே. அப்படித். தனித் தன்மை சுதர்சனனுக்கு இருப்பதாக நினைத்தான் ரகு. - - - - - ஏனோதானோ என்று வகுப்பு நடத்துவது சொற்களை முழுதிப் பூசி மெழுகுவது, இவையெல்லாம் சொல்லிக் கொடுத்தாலும் சுதர்சனனுக்கு வராது. செய்வதை முழு, நம்பிக்கையோடும் பூர்ண திருப்தியோடும் செய்யும் திருந்திய தன்ன்ம அவனுக்கு உண்டு என்பதை ரகு அறிவான். சுதர்சனன் தன்னுடைய நண்பனின் கல்லூரியில் முறை: யாக வேலைக்கிச் சேர்ந்த மறுநாளே புல்வர் பட்டத்துக்கும் தனிப் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப் போவதாகப் பத்திரிகைகளில் தடபுடலாக விளம்பரங்கள் கொடுக்கம் பட்டன. - - 'வாருங்கள், மாணவ மணிகளே! வாருங்கள்! வந்து சேருங்கள்! தன்மான இயக்கத்தின் தனிப்பெரும் புலவர், அடலேறு: அறிஞர் பெருந்தகை சுதர்சனனார் வகுப்புக்களை நடத்து கிறார் என்பதுபோல் அந்த விளம்பரத்தில் சிறுபிள்ளைத் தனமாகத் தன்னைப் புகழ்ந்து அடை மொழிகள் கொடுக்கப் பட்டிருப்பதை மட்டும் சுதர்சனன் ரகுவிடம் கண்டித்துச் சொன்னான். . . . - - "புகழுக்கும் கிண்டலுக்கும் நடுவிலுள்ள எல்லைக் கோடு மிக மிகச் சிறியது. புகழ் ஓர் இழை பிசகினாலும், அதுவே கேலிக் கத்தாகி விடும். இந்த விளம்பரத்தில் அப்படிக் கேலிக்கத்துத்தான் தெரிகிறது. மலிவான வியாபாரத்துக்கு விளம்பரப்படுத்துவதுபோல் அறிவு: பூர்வமானவற்றின் நயத்தைக் கொச்சையாக எடுத்துச். சொல்லி விளம்பரப் படுத்தக் கூடாது. அது எனக்கு ஒரு. போதும் பிடிப்பதில்லை'-என்று அவன் இதைப் பற்றி ரகுவிடம்கூட வாதாடினான். . . . . . . .