பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 171 'அப்படி எல்லாம் விளம்பரம் போட்டால்தான் நாலு 喙 ,_号 - த ஆட்கள் சேரும்' என்றான் ரகு. ಹT6) 6) ஏழு மணி முதல் ஒன்பதரை . ഖജ7ുമ F Lyfrað) Gs ஆறு மணி முதல் எட்டரை வரையும் அங்கே வகுப்பு நேரங் களாக இருந்தன. -

பத்து நாட்களில் தபால் மூலமும் நேரிலுமாகப் பதினைந்து பேர் புலவர் வகுப்புக்களில் படிப்பதற்கு மனுசி செய்திருந்தார்கள். அதில் பதினோரு பேர் ஆண்கள். நாலு பேர் பெண்கள். எல்லாரும் அநேகமாக ஆரம்பப் பள்ளி, நடுத்தரப் பள்ளிகளில் ஆசிரியப் பணி புரிபவர் களாக இருந்தார்கள். ஏழு பேர் ஏற்கெனவே வித்வான். முதல் நிலைத் தேர்வு தேறி இறுதி நிலைத் தேர்வுக்காகவும்: எட்டுப் பேர் முதல் நிலைத் தேர்வுக்காகவும் சேர்ந்திருசி தார்கள். முதல் நிலைத் தேர்வுக்கு எல்லாப் பாடங் களுக்கும் சேர்த்து ஆண்டு முழுவதற்குமாக ரூபாம் நானூறும், இறுதி நிலைக்கு ரூபாய் ஐநூறும் சேரும்போதே முன் பணமாகக் கட்டிவிட வேண்டும் என்று ரகு நிபந்தனை விதித்திருந்தான். புலவர் வகுப்புக்கு மட்டுமே வகுப்புக்கள் தொடங்குவதற்கு முன்பே ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் முன் பணமாகக் கையில் வந்து சேர்ந்துவிட்டது. வேறு பிரிவு களான, எஸ்.எஸ்.எல்.சி. பி.யூ.சி., பி.ஏ., எம்.ஏ.வகுப்பு களுக்குச் சேர்ந்த மாணவர்கள் வகையில் முப்பதிலிருந்து முப்பத்தையாயிரம் வரை கிடைக்கும் என்றும் தெரிந்தது.

பெரிய நகரங்களில் கல்வியும் ஒரு புதிய வியாபாரம் ஆகியிருப்பது புலப்பட்டது. ப்டிப்பதற்கு ரேட், பாஸ் பண்ணுவதற்கு ரேட், கிளாஸ் வாங்குவதற்கு ரேட் என்று நேரடியாகவும். மறைமுகமாகவும் எல்லாவற்றிற்கும் ரேட் டுகள் ஏற்பட்டிருந்தன. "சும்மா வகுப்புக்கு வகுப்பு முடிஞ்சதை முடிஞ்சவறை நடத்தினால் போதும். கடைசியா எல்லாம் சிண்டிகேட் சிதம்பரநாதன் பார்த்தும்பாரு' என்று சக ஆசிரியரான