இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
, , , 72 பொய்ம் முகங்கள் ஒருவர் சுதர்சனனிடம் சிரித்துக்கொண்டே சொல்லி உயிருந்தார். - -
- அதுதான் என்னால் முடியாது சார்! எதையும் அரை குறையாகச் செய்ய நான் இன்னும் பழகலே. என்னிக்குமே. அதைப் பழகிக் கொள்ளும் விருப்பமும் இல்லை. எதைச் செஞ்சாலும் நம்பிக்கையோடு முழுமையாகவும் உண்மை யாகவும் செய்யனும்னு பிடிவாதம் பிடிக்கிறவன் நான். இந்தப் பிடிவாதத்தால் வாழ்க்கையிலே அவ்வப்போது நிறைய இடைஞ்சல்களையும் பார்த்தாச்சு...' - "'உங்க பிடிவாதம் உயர்ந்த ல்ட்சியமா இருக்கலாம். ஆனால் இது மாதிரி டுடோரியல் காலேஜிலே அதுபோல இலட்சியங்களுக்கு எந்த அவசியமும் கிடையாது. இங்கே வ்ர்ரவங்களுக்கும் படிக்கிற ஆசை இல்லே. எப்படியாவது பாஸ் பண்ற ஆசை மட்டும்தான் உண்டு. சொல்விக் கொடுக்கிறவங்களுக்கும் படிக்கிறவங்களைப் பாஸ் பண்ணி வைக்கிற ஆசை மட்டுமே இருந்தால் போது மானது." . . .
இது ரொம்பப் பரிதாபகரமான விஷயம்' என்றான் சுதர்சனன். - - - - மேற்கூறிய விதத்தில் சக ஆசிரியர் தன்னிடம் பேசியது எவ்வளவு தூரம் சரியானது என்பது புலவர் முதனிலை வகுப்புக்குச் சேர்ந்திருப்பவர்களுக்கு முதல் நாள் பாடம் எடுத்தபோது சுதர்சனனுக்கே அநுபவ பூர்வமாகத் தெரிந்தது. - - - சேர்ந்திருந்த எல்லாரும் எப்படியாவது பாஸ் பண்ணிப் பட்டத்தை வாங்கிக் கொள்ளும் அவசரத்தில்தான் சேர்ந் திருந்தார்கள். சிலபேருக்கு உயிரெழுத்து, மெய்யெழுத்து, சார்பெழுத்துப் பற்றிக்கூட ஒரு விவரமும் தெரிந்திருக்க வில்லை. "தமில் வால்க' என்று எழுத மட்டும் தெரிந்த அறிவுக் கலப்பற்ற உணர்ச்சிப் பெருக்கான காலத்தில் இப்படிப்பட்ட தமிழ்ப் புலவர்கள்தான். உருவாக முடியுமோ என்று கூடச் சந்தேகமாக இருந்தது. அரசன்