உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பொய்ம் முகங்கள் முடியாது. இருக்கக் கூடாது'-என்று சற்று விரிவாகவே கேள்வி கேட்ட மாணவனுக்கு அதை விளக்கினான் சுதர்சனன், - - இன்றுள்ள எல்லாமே சங்க காலத்திலும் உண்டு என்பது போலவே பலர் புத்தகங்கள் எழுதியும் பேசியும் ஒரு போலி யான சுகத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள். அதைக் கலைத்து அல்லது மறுத்து உண்மையைப்பேச முற்படுகிற் வர்களை எல்லாம் தமிழ்த் துரோகி என்று கூசாமல் வசை பாடத் தொடங்கினார்கள். சுதர்சனன் இதற்கு அஞ்சிய தில்லை. வர்ணாசிரம தருமத்தையும், சாதி முறைகளையும் அகற்ற வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டு அவை இந் நாட்டில் இருந்ததே இல்லை என்றும் சொல்லுகிற ஆராய்ச்சிக்கு இரட்டை முகங்கள் உண்டு. நம்மிடமும் தவறுகள் இருந்திருக்கின்றன. இனியாவது அவற்றை அகற்றப் பாடுபடுவோம்' என்ற விதத்தில் அணுகுவதைச் கதர்சனன் ஒப்புக்கொள்ளத் தயங்குவதே இல்லை. "நம்மிடம் தவறுகளே இருந்ததில்லை. அவை அனைத்தும் இடைக்காலத்தில் பிறரால் புகுந்தவை என்பது போல் விளக்கங்களைச் சுதர்சனன் ஏற்பதில்லை. தவறும் செய் திருக்கிறோம்' என்பதை எவன் மறுக்கிறானோ அவன் திருந்தவே முடியாதவன் என்பது சுதர்சனனின் அழுத்த மான கருத்தாக இருந்து வந்தது. தன் புண்ணைத் தானே சொரிந்து கொண்டு சுகம் காணுவது போன்ற ஆராய்ச்சி களில் அவனுக்கு நம்பிக்கை இருந்ததில்லை. இப்படிச் சுகம் காணுகிறவர்களை வகுப்பு நாட்களிலும் மேடைகளிலும் அவன் நிறைய எதிர்த்திருக்கிறான். பொய்யான சுகங்கள் ஒருபோதும் அவனுக்கு விருப்பமாயிருந்ததுமில்லை. திருப்தி யளித்ததும் இல்லை. . . . . . . . . . . . У. 22 « . தனிப் பயிற்சிக் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்த பத்தாவது நாளோ பதினைந்தாவது. நாளோ ரகுவின் நண்பராகிய கதாசிரியர் ஒருவர் தமது புத்தக வெளியீட்டு