உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பொய்ம் முகங்கள் 'டி. ஆர். சுதர்சனன்’ என்று மட்டுமே வைத்துக் கொண்டி ருந்தும் ராவ் இப்படிக் கொச்சையாகத் தன்னை விசாரித்து விட்டாரே என்று எண்ணி சுதர்சனனின் மனம் சங்கடப் படத்தர்ன் செய்தது. . . . . . . சீனிவாச ராவுக்கு என்னவோ அந்தப் பள்ளிக் கூட நிர்வாகத்தைப் பற்றிப் புறம்பேசுவதில் அலாதியான ருசியே உண்டு. ஆனால் பள்ளி நிர்வாகியையோ, நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களையோ அவர் நேரில் பார்த்து விட்டால் அடக்கமும் மரியாதையும் உள்ளவர்போல் நடிக்கத் தவறமாட்டார். தலைமையாசிரியர்.வாசுதேவனை தேரில் பார்த்தாலும் அப்படித்தான். ஆனால் ஸ்டாஃப் ரூமில் நாயுடுக்கள் அல்லாத பிற ஆசிரியர்கள் அடங்கிய குழுவின் அரட்டையில், 'ஆதர்சபுரம் ஜமீன்தார் ஹைஸ்கூல்-பை தி நாயுடுஸ்- ஃபார் தி நாயுடுஸ்......'என்பதுபோல் ராவ் கிண்டல் செய்து அடிக்கடி பேசுவது உண்டு என்பதைச் சுதர்சனன் நிறையக் கேள்விப்பட்டிருந் தான். சீனிவாச ராவ் யாரிடம் யாரைப் பற்றி எப்படி எப்போது புறம் பேசுவார் என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. தலைம்ையாசிரியர் இல்லாதபோது தலையாசிரியரைப் பற்றிச் சுதர்சனனிடம் பேசுவார். சுதர்சனன் இல்லாதபோது சுதர்சனனைப்பற்றித் தலைமை யாசிரியரிடம் பேசுவார். யார் யார் எல்லாம் அப்போது அந்த விநாடிவரை பக்கத்தில் இல்லையோ அவர்களைப் பற்றி யார் யார் எல்லாம் பக்கத்தில் இருக்கிறார்களோ அவர்களிடம் பேசித் தீர்ப்பது புலிக்குட்டி சீனிவாச ராவின் பழக்கம். அங்கு வந்த சிறிது காலத்திலேயே சுதர்சனன் இதைப் புரிந்து கொண்டிருந்தான். அதனால் ராவ் ஜன்ன லோரமாக நின்றே பத்து நிமிஷம் பேசிக் கொண்டிருந்தும் அவன் சும்மா கேட்டுக் கொண்டிருந்தானே ஒழியப் பதில் எதுவும் சொல்லவில்லை. ராவ் பேசுவதைக் கேட்கலாமே. ஒழிய பதில் சொல்லக்கூடாது. ஏனென்றால் அந்தப் பதில் களைக் கொண்டே அதற்குரியவர்களைப் பற்றி வேறு யாரிடமாவது பேசவும் ராவ் தயங்கம்ாட்டார்.