தா. பார்த்தசாரதி 1 7 9 படிக்கணும்னு என்ன அவசியம்? தலைப்பு முன்னுரை இதுகளை வச்சே ஐயா ஒருமணி நேரம் பேசிச் சமாளிச்சிடு வாரு. இதைக் கேட்டுச் சுதர்சனனுக்கு சிரிப்பு வந்தது. ஆபாசமாகப் பேசவும் எழுதவும் சிலருக்கு அந்நியமொழி ஒரு போர்வை. தவறு செய்பவரை ஆதரிக்க அவர் தமக்கு வேண்டியவர் என்றொரு போர்வை, விபசாரத்தை எழுத் தாக்குவதற்கு விற்பனைக் கவர்ச்சி என்றொரு போர்வை-இப்படி ஆயிரம் போர்வைகளும், பொய்ம் முகங்களும் தேவைப்படுகிற சமூகத்தில் நீதி நியாயம் நேர்மை உழைப்புக்களுக்கு எப்படி மதிப்பும் மரியாதையும் கிடைக்க முடியும் என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. கோபமாகவும் இருந்தது. : அங்கே என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகவும், தன் பெயரிட்டு எழுதிக் கொடுக்கப் பெற்ற அழைப்பிதழைக். கெளரவப்படுத்துவதற்காகவும் அந்த வெளியீட்டு விழா வுக்கு ரகுவுடன் சுதர்சனனும் போயிருந்தான். விழா நடக்கும் கூடத்தின் முகப்பிலேயே கல்கண்டு, சந்தனம், ரோஜாப்பூவோடு வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது. சினிமா எக்ஸ்ட்ராக்கள்போல் பளிச்சென்று விட்டுத் தெரியும் அடக்கமற்ற அழகுடன் கூடிய நாலைந்து பெண் கள்தான் வரவேற்புப் பொறுப்பில் இருந்தார்கள். இரண்டு புத்தகங்களைத் தயாரிப்பதற்கு ஆகிற செலவு அந்த ஒரு வெளியீட்டு விழாவுக்காகவே செலவிடப்பட்டிருக்கும் என்று தோன்றியது. - - - - "படுக்கையறைப் பாவை ஒரு லட்சம் பிரதிகள் வரை விற்றன. கட்டிலில் கட்டழகி ஒன்றரை லட்சத்தை எட்டி யது. நம் ஐயாவின் இராசியுள்ள கையால் வெளியிடப் படுகிற இந்தத் தலையணை நாயகியின் தனியறை லீலை கள்’-இரண்டு லட்சம் பிரதியை எட்டிவிடும் என்பதில் எங்களுக்கு ஒரு சிறிதும் ஐயம்ல்ெலை".-என்பதாக வரவேற். புறையில் மன்மதன் பதிப்பக அதிபர் மதனகோபால் கூறி
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/181
Appearance