உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 - - பொய்ம் முகங்கள் னார். ஒரு விளம்பரக் கவர்ச்சி கருதியோ என்னவோ கதாசிரியர் குமாரி சுகுணவல்லி-அசல் பெண்ணாகவே. அன்று அங்கே மேக்-அப் போட்டுக் கொண்டு. வந்திருந்தார். - ஐயா தலைமையுரை வழங்க எழுந்திருந்தார். 'தலை யனை என்பது அழகிய தூய தனித் தமிழ்த் தொடர். இத். தலைப்பில் நாயகி என்ற சொல்லையும் பாமரர்களைக். கருத்திற்கொண்டு பயன்படுத்தியிருக்கிறார். எனினும், இரண்டு சொற்களும் பக்தி மார்க்கத்திலும் வருகின்றன. நாயகன், நாயகி பாவத்தைப்பற்றி ஆழ்வார்கள் நிறையப் பாடியிருக்கிறார்கள். கிருஷ்ணலீலா, ராமலீலா என்றெல் லாம் தொடர்கள் பக்தி மார்க்கத்தில் உண்டு. இதன் ஆசிரியர் நமது இயக்கத்தில் எனது தலைமையின் கீழே. தொண்டராக இருந்தபோது இலக்கியம் கற்றவர். அதனால்தான் நாயகி-விலை-போன்ற சொற்களை இடமறிந்து பயன்படுத்தியுள்ளார். வாசகர்களை இவர் எப்படி வசியம் செய்கிறாரோ, தெரியவில்லை.-இவரது. நூல்கள் இலட்சக் - கணக்கில் விற்பதாகப் பதிப்பாளர் மன்மதன் சொல்கிறார். பதிப்பாளரோ மன்மதன். ஆசிரியரோ குமாரி சுகுணவல்லி. இருவரும் இணைந்தால் புது நூல் ஒன்று பிறக்கிறது. நல்ல வேளையாக வேறு எதுவும் பிறக்கவில்லை-(சிரிப்பு.கைதட்டல்) ஆசிரியர் "குடும்பக்கட்டுப்பாடு தெரிந்தவர். (பெரும் சிரிப்பு-பெரும் இந்த நகைச்சுவை சுதர்சனனுக்கு மிக மிக மட்டமாக வும் அபத்தமானதாகவும் இருந்தது. சிரிப்பு வரவில்லை. எரிச்சல்தான் வந்தது. முக்கால்வாசித் தமிழ்ச் சொற். பொழிவுகளில் பேச்சாளர்களின் தரம் குறைந்து அவர் தடு. மாறுகிற இடம் நகைச்சுவையாகப் பேசியாக வேண்டு. மென்று அவரே முனைந்து வலிந்து முயலுகிற இடம் தான, - -