பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 181 . இந்த இடங்களில் ரகுவோ உற்சாகமாகக் கைதட்டி அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டிருந்தான். சுதர்சன னுக்கு அந்த அறியாமையைக் கண்டு பச்சாத்தாபம்ாக இருந்தது. 'ஐயா பிரமாதமாப் பேசறாரு, அவரைத் தவிர வேற யாரு தலைமை வகிச்சிருந்தாலும் இவ்வளவு கூட்டம் இங்கே வராது' என்று சுதர்சனனின் காதருகே முனு: முணுத்தான் ரகு. - - சுத்ர்சனன் அதற்குப் பதில் சொல்லவில்லை. வெளி பீட்டு விழா என்கிற இரசக் குறைவான ஆபாச நாடகத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் அவன். + அப்புறம் புத்தகத்துக்குப் பாராட்டுரை வழங்க வந்த ன்ல் லாரும் புத்தகத்தை மறந்தாற்போலத் தலைமை வகித்த ஐயாவையும், அவருடைய உரையின் சிறப்பையும் பற்றியே பேசி முடித்தனர். . . விழா இறுதியில் பெண் வேடமணிந்த கதாசிரியர் பெண்ணைப் போலவே நாணிக் கோணி நடந்து மைக்குக்கு முன் வந்தபோது கூட்டம் அசட்டுச் சிரிப்பலையால் அதிர்ந் தது. - - - - அந்தக் கூட்டம் முழுவதுமே அலிகளைப் பார்த்து இரசிக்கும் சாரமற்ற நபும்சகக் கும்பலோ என்று பொறுக்க முடியாத அளவுக்கு ஆத்திரம் ஆத்திரமாயிருந்தது. சுதர்சன இ ககு, - 25 தனிப் பயிற்சிக் கல்லூரி வகுப்புக்கள் வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தன. வகுப்புக்களைத் தவிர்ச் சென்னை நகரமும் அநுபவங்களும் பல கசப்பான உண்மை களை ச் சுதர்சனன் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பளித்தன . . பொ-12 - --