உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 82 . பொய்ம் முகங்கள்

  • குமாரி சுகுணவல்லியின்-கதைப் புத்தக வெளியீட்டு விழா முடிந்த நாலைந்து நாட்களுக்குப்பின் ஒரு காலை வேளையில் ரகுவைத் தேடி இராமநாதபுரத்திலிருந்து ஒரு கல்லூரிப் பேராசிரியரும் அவருடைய மனைவியும் வந்திருந் தார்கள். கணவன், மனைவி இருவருமே அரசாங்கக் கல்லூரிப் பேராசிரியர்கள். கணவன் ஆங்கிலப் பேராசிரியர், மனைவி தாவர இயல் பேராசிரியை. அவர்கள் திருமணம் செய்து கொண்டு மிகச் சில மாதங்களே ஆகி யிருந்தன. திடீரென்று கணவரைக் கன்னியாகுமரிக்கும் மனைவியைத் திண்டுக்கல்லுக்கும் அவசரம் அவசரமாக மாற்றிவிட்டார்கள். இந்த மாறுதலுக்கு இரண்டு வாரங் களுக்கு முன்புதான் கல்லூரி ஆசிரியர்களை ஈவு இரக்கமற்ற முறையில் கண்டபடி ஊர் மாற்றுவதைக் கண்டித்து ஒரு மகாநாட்டில் கல்வி மந்திரியே பேசியிருந்தார். அந்தப் பேச்சு எல்லாத் தினசரிகளிலும் முதல் பக்கத்தில் வெளி யாகித் தட்புடல் பட்டது. கல்வி அமைச்சரின் அந்த அரிய கருத்தை வரவேற்றுப் பாராட்டிப் பத்திரிகைகள் எல்லாம் தலையங்கங்கள் எழுதியிருந்தன. ஆனாலும் திடீர் மாறுதல் களால் ஆசிரியர்கள் இன்னும் அவதிப் பட்டுக்கொண்டு தான் இருந்தார்கள். ஆசிரியர்களைப் பந்தாடுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தது. மந்திரிகள் அல்லது உயர் அதிகாரிகளின் சிபாரிசுகளோடு யார் முயன் றாலும் அவர்கள் முயலும் இடங்களுக்கு உடனே மாறுதல் கள் கிடைத்தன. யாருடைய சிபாரிசும், இல்லாதவர்கள் நினைத்த இடங்களுக்கு நினைத்த சமயத்தில் சுலபமாகப் பந்தாடப்பட்டார்கள். நடு ஆண்டில் ஒர் ஊரிலிருந்து இன்னோர் ஊரில் தங்கள் குழந்தைகளின் படிப்பை மாற்று வது முதல் எல்லா வகையிலும் மாறுதலுக்கு ஆளானவர்கள். சிரமப்பட்டார்கள். சுதர்சனன் வந்தவர்கள் ரகுவிடம் பேசிக் கொண்டிருந்ததைச் சும்மா உடனிருந்து கவனித்துக் கொண்டுதான் இருந்தான். . - . . "நீ என்ன பண்ணி எப்படிச் சாதிச்சுக் கொடுப்பியோ தெரியாது ரகு! இந்தக் காரியத்தை எங்களுக்காக நீ தான்