பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 18з சாதிச்சுக் கொடுக்கணும். இந்த டிரான்ஸ்ஃபரை மட்டும் - நானோ என் மனைவியோ ஒப்புக் கொண்டால் எங்க குடும்ப வாழ்வே சிதறிப் போகும்ப்பா'- . 'எனக்கு யாரையும் அதிகமாகத் தெரியாது. சிண்டி கேட் சிதம்பரநாதன் மூலமா ஏதேனும் முயற்சி பண்ணிப் பார்க்கலாம். கல்லை எறிஞ்சு பார்க்கிறது, மாங்கா விழுந்தா விழட்டும்ே'-என்றான் ரகு. - விளக்கடியிலே தேங்குகிற இருட்டுப் போல மற்றவர் களுக்கு அறிவு அளிக்கிற கல்வித் துறையிலேதான் எல்லா அறியாமைகளும் மண்டிக் கிடக்கின்றன. பொறாமை, காழ்ப்பு, சின்ன விரோதங்கள், சீறி எதிர்த்துப் பழி வாங்குதல், அடுத்தவனைக் கண்டு வயிற்றெரிச்சல், இவை எல்லாம் கல்வித் துறைக்குள்ளேயே இருந்தால் எப்படி?' என்று வினவினான் சுதர்சனன். . . . 'இந்தப் பேதங்கள்,வேறுபாடுகளை எல்லாம் போக்கு வதற்குத்தான் கல்வி வளர்ச்சித் திட்டங்கள் என்று தலைவர் களும், பெரியோர்களும் அடிக்கடி பேசுகிறார்கள். உபதேசிக்கிறார்கள். ஆனால் இக்குறைகள் கல்வி சம்பந்தப் பட்ட இடங்களில் புதர் மண்டிக்களை சேர்த்திருக்கிற மாதிரி வேறெதிலும் புதர் மண்டிக்களை சேரவில்லை சார்'- என்றார் வந்தவர். - . . . * > "பிரமோஷன், டிரான்ஸ்ஃபர் எல்லாவற்றுக்கும் லஞ்சம் வேறு தரவேண்டியிருக்கிறது. எ ன் றாள். வந்தவரின் மனைவி. . . . . . - o அதிகார வர்க்கத்தினரிடையே நேர்மையையும், நாணயத்தையும் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் , வளர்க்காதவரை இந்த நாட்டில் எதையுமே திருத்த முடியாதென்று சுதர்சனன் நினைத்தான். r ஒவ்வொரு நாளும் சென்னை எழும்பூர் இரயில் நிலை யத்தில் வந்து அதிகாலையில் இறங்கும் ஒவ்வொரு பிரயா -ணியும் ஒரு குறையுடன் அல்லது மனத்தாங்கலுடன் தான்