பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 84 பொய்ம் முகங்கள் சர்க்கார் அதிகாரிகளையோ, அலுவலகங்களையோ முற்று: கையிட வந்து இறங்குகிறார்கள், லஞ்சம், சிபாரிசு, அதிகார துஷ்பிரயோகம் இவற்றுக்கான எல்லா ஏற்பாடுகளும் தலை நகரில் சகல வசதிகளோடும் இயங்குகின்றன. சுதந்திர இந்தியாவின் எல்லா மாநிலத் தலைநகரங்களும் இப்படித். தான் இருக்கின்றன. இது ஆரோக்கியமான நிலைமை, அன்று. கல்வி இலாகாவிலிருந்து ஆசிரியருக்குத் தொல்லை கள். மேலதிகாரியிடமிருந்து கீழதிகாரிக்குத் தொல்லைகள், என்று தொல்லைகள் பிரதான நீரோட்டம், கிளை நீரோட்டம் துணை நீரோட்டம் எனப் பிரிந்து பல உப நதிகளாகக் கால்வாய்களாக - வாய்க்கால்களாகப்பாய்ந்து எங்கும் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தன." தொல்லைகள், தொந்தரவுகளிலிருந்து யாருக்கும் விடுத லையோ சுதந்திரமோ கிடைக்கவில்லை. பதவி செல்வாக்கும் வசதி, பணமுள்ளவர்களுக்குத்தான் அதிகாரிகளும் போலீஸ் காரர்களும் பயப்படுகிறார்கள். மரியாதை செய்கிறார்கள். ஏழையை, நல்லவனை சொல்லிலும் ஒரே மாதிரி எளிமை. யாயிருப்பவனை யாரும் எங்கும் மதிப்பதில்லை. நிஜம். முகத்தைக் காட்டுகிறவனை விடப் பொய்ம் முகங்களைக் காட்டுகிறவனுக்குத்தான் மதிப்பு அதிகம் இருந்தது. எந்தச் சமயத்தில் எந்த முகத்தை எப்படிக் காட்டினால் காரியம், நடக்கும் என்று எவன் தெரிந்து வைத்திருந்தானோ அவன் எதிலும் வெற்றி பெற முடிந்தது. தெரியாதவன் ஒரு சிறு அங்குலம் கூட முன்னேற முடியாமல் இருந்த இடத்தி. விருந்தே மூச்சுத் திணறினான். பாண்டியன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ் மாதிரித். தமிழ்நாட்டின் தெற்குக் கோடியிலிருந்து சென்னைக்கு ஒரு புதிய ரயில் விட வேண்டும். சிபாரிசு எக்ஸ்பிரஸ் அல்லது. மனத்தாங்கல் எக்ஸ்பிரஸ் என்று அதற்குப் பொருத்த மாகப் பெயரிட வேண்டும். மார்ச் ஏப்ரல், மே மாதங்களில் "அட்மிஷன் எக்ஸ்பிரஸ்' என்று கூட ஒரு புது ரயில் விடலாம்!'-என்றான் சுதர்சனன். . -