உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி . - - 185 இப்படி அவன் கூறியது மேலோட்ட்மாகக் கேலி தொனிக்க இருந்தாலும் உள்ளுர வேதனை உந்தியதால் தான் இதை அவன் பேசியிருந்தான், , - . ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் ஹோட்டல் கிரிவன்ஸ்-ஹோட்டல் ரெகமண்டேஷன் - என்றெல்லாம் பெயரில் அப்படி வருகிறவர்கள் தங்குவதற்குப் புது ஒட்டல் களும் கட்டலாம்'- என்று சிரித்தபடியே கூறினார் வgதவர். எனக்குத் தெரிந்த ஒரு டிரான்ஸ்ஃபர், விஷயத் தில் சம்பந்தப்பட்ட மேலதிகாரிக்கு இம்போர்ட்டட் விஸ்கிஸ்காட்ச்-ஒரு பாட்டில் கொண்டு போய்க் கொடுத்தால் தான் காரியம் நடக்கும் என்றார்கள். பாவம்; டிரான்ஸ்ஃப ருக்காகத் தவித்துப் போய் வந்திருந்த ஏழை அடிஷனல் புரொஃபலருக்கு 'ஸ்காட்ச்-என்றால் என்ன என்றே புரிய வில்லை. அப்புறம் விளக்க வேண்டியிருந்தது -என்ற்ான் கு. • - - - , , இரத்தக் கண்ணிர் சிந்தாத குறையாக மனம் வெந்து அழுதபடியே 'பிளாக்"கில் ஸ்காட்ச் வாங்கி வரப் பணத்தை எண்ணி வைத்த பின்பு தான் காரியம் நடக்கும் போலிருந்தது. . + லஞ்சமும், வேண்டியவர், வேண்டாதவர்-விருப்புவெறுப்புகளும் ஒழிகிறவரை நம் நாடு உருப்படாது நாடு உருப்படாமல் இருந்தாலும் பரவாயில்லை. தாங்கள் உருப் படுவதற்கு லஞ்சமும், சிபாரிசும், அதிகார துஷ்பிரயோக மும் இங்கு நிரந்தரமாக இருக்க வேண்டும். என்று அதிகாரி களில் பலர் நினைக்கிறார்கள். தலைவர்கள் மேடைகளில் பல மக்கள் முன்னிலையில் ஒரு முகத்தைக் காட்டுகிறார்கள்: அந்த முகம் நியாய வேட்கை உள்ளது போல் அந்த வநாடி யில் தெரிகிறது. ஆனால் உண்மையில்லை. அது ஒரு தற்காலிக முகமூடிதான். உண்மை முகம் என்னவோ அந்த முகமூடிக்குப் பின்னால்தான் இருக்கிறது.' - "இந்தியப் பொது வாழ்வில் ஸ்ப்ளிட் பெர்ஸனாலிட்டி. இரட்டை வேஷம் இவை சர்வசாதாரணமான அம்சங்கள் ஆகும்.