உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 187. நானும் என் மனைவியும் இங்கேயிருந்து விலகி ஆஸ்திரேலி யாவுக்கோ அமெரிக்காவுக்கோ ஏதாவது ஒரு யூனிவர்ஸி டிக்கு வேலைக்குப் போய் விடலாமென்று நினைக்கிறோம். órr吁:”” - M. - - - நீங்கள் நினைப்பது போல் முன்பே நினைத்த பல டாக்டர்கள், என்ஜீனியர்கள், பேராசிரியர்கள் ஏற்கெனவே. அங்கெல்லாம் போய் அங்கேயே தங்கிவிட்டார்கள். இங்கே மூளை வரட்சி- பிரெய்ன் டிரெய்ன் வந்ததற்கு அதுவும் காரணம்' என்றான் சுதர்சனன். • * 'இராமநாதபுரத்தில் வேவை பார்க்கிற தெருப் பெருக்கும் தொழிலாளியைத் திடீரென்று கன்யாகுமரிக்கு மாற்ற முடியாது. ஆனால் ஒரு பேராசிரியரை உடனே மாற்றி விட முடியும். இங்கே முக்கால் வாசி அதிகாரிகள் ஸாடிஸ்ட்டுகள். அதாவது பிறரைத் துன்புறுத்தி மகிழ் கின்றவர்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது'சுதர்சனன் மனக் கொதிப்போடுதான் இந்த வார்த்தை களைச் சொன்னான். தனியார் நிர்வாகமோ, அரசாங்க நிர்வாகமோ கல்விக் கூடங்களில் பணிபுரிகிறவர்களில் பலர் பலர் வெறும் சிபாரிசு களில் மட்டுமே வேலைக்கு வருவதால் தரம் சுமாராகிறது. தரம் உள்ளவர்களுக்கு மரியாண்த, இல்லை. அதனால் நிர்வாகத்தையும் ஆசிரியர்களையும் மாணவர்கள் மதிப்ப தில்லை. எங்கும் குழப்பம் அமைதியின்மை எல்லாம் உண்டாகின்றன. குழப்பத்தின் கண்ணுக்குத் தெரிகிற முனையில் இளைஞர்கள் இருந்தாலும் கண்ணுக்குத் தெரி யாமல் எங்கோ இருக்கும் அதன் மறுமுனையில் முதியவர் களும் அதிகாரிகளும், நிர்வாகமும் அதன் ஒராயிரம் முறை கேடுகளும் ஊழல்களும்தான் இருந்தன. இருக்கின்றன. ஆணிவேராக இருக்கும் அந்த அடிமட்டத்து ஊழல்களை அறுத்து விட்டாலே மறுமுனையில் தானாக வாட்டம் ஏற். பட்டு விடும். அடிமட்டத்து ஊழல்கள்தான் மறுமுனையில் தளிர்க்கும் இளைய ஊழல்களுக்கு ஊட்டம் தருகின்றன,