நா. பார்த்தசாரதி 1 7 அவர் தம்முடைய வகுப்பறைக்குத் திரும்பச் சென்ற பின், சுதர்சன்ன் மறுபடி தன்னுடைய நாற்காலியில் போய்' அமர்ந்தான். கவிதை எழுத வரவில்லை. மனம் எது எதிலோ போய்ச் சிக்கியிருந்தது. வடக்குக் கோடியில் மீண்டும் இரண்டு பையன்கள் எழுந்து, "சார் இண்ட்ரெஸ் டிங்கா ஒரு ஸ்டோரி சொல்லுங்க சார்...' என்றார்கள். "கதை கிடக்கட்டும். பாடத்தைப் படிங்க பரீட்சை வருது’’- - - - சிறிது கடுமையாக அதட்டி அவன் இதைச் சொல்லியபின் கதை சொல்லுமாறு கேட்கும் துணிவு மாணவர்களில் யாருக்கும் வரவில்லை, - - 2. அந்த வகுப்பு முடிவதற்கு இருபது நிமிஷமே இருக்கும் போது பள்ளிக்கூடத்துப் பியூன் நாதமுனி தபால்களைக் கொண்டு வந்தான். அந்த நேரம்தான் வழக்கமாகத் தபால். கள் வரும். சுதர்சனத்துக்கு இரண்டு கடிதங்கள் இருந்தன. அந்த ஜில்லாவின் தமிழ் ஆசிரியர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து தமிழாசிரியர்களின் உரிமைக்குப் போராடும். அமைப்பைப் பலப்படுத்துமாறு அதன் காரியதரிசி எழுதிய கார்டு ஒன்று. அரசாங்கத் தபால் தலை ஒட்டிய மஞ்சள் நிறக் கவர் மற்றொன்று. மஞ்சள் நிற உறையில் அனுப்பு கிறவர் முகவரி இருக்க வேண்டிய இடத்தில் ஆல் இண்டியா ரேடியோ-திருச்சி-என்று ரப்ப்ர் ஸ்டாம்ப் குத்தப்பட்டி ருந்தது. ஏற்கெனவே கவர் பிரித்துக் கிழிக்கப்பட்டிருந்தது. உடனே ஒரு பையனை அனுப்பி பியூனைக் கூப்பிட்டுச் சுதர்சனன் கேட்டான். . . . - - 'ஏம்ப்பா? இது இப்படிப் பிரிச்சே வந்திச்சா? இல்லே இங்கே யாராச்சும் பிரிச்சுப் படிச்சாங்களா?' 'ஹெச்.எம். தெரியாமப் பிரிச்சுட்டதா உங்க கிட்டச் சொல்லச் சொன்னாருங்க?
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/19
Appearance