188 பொய்ம் முகங்கள் என்று சுதர்சனன் கருதினான். கல்வித்துறை ஒரு கொச்சை யான மீன் வியாபாரம் போல ஆகிவிட்டதால் அங்கே, கெளரவம், மரியாதை, பண்பாடு எல்லாம் ஒருங்கே தொலைந்து போய் விட்டதாகத் தோன்றியது. அநியாயமான டிரான்ஸ்ஃபரில் சிக்கி மனம் குழம்புகிற ஒர் ஆசிரியன் எப்படி மிலர்ந்த முகத்தோடு மாணவர்களை அணுக முடியும்? ஒரு பேராசிரியனுக்கு நிர்வாக்மும், கல்வித் துறை அதிகாரிகளும் ஆயிரம் தொல்லைகளைக் கொடுத்து விட்டு அவன் தொல்லைகளுக்கு அப்பாற்பட்ட அறிவாளி யாக விளங்கவேண்டுமென்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?' என்று கேட்டார் வந்தவர். "எல்லாம் சமாளித்துக் கொள்ளத் தெரியணும்' என்றான் ரகு. "சமாளித்துக்கொள்வது என்பது ஒரு முறை இருமுறை தான் சாத்தியம். ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் சமாளித்துக் கொண்டே வாழ்ந்துவிட முடியாது. ஒரு சுதந்திர நாட்டில், அப்படி வாழவும் கூடாது'- என்று சுதர்சனன் அதை உடனே குறுக்கிட்டு மறுத்தான். 'என்ன செய்யிறது? நடைமுறையை அநுசரித்துத் தானே போகணும்?" - - "இந்த வறட்டு நியாயம் எனக்குப் பிடிக்கவில்லை. ரகு? நடைமுறைகளை எல்லாம் கீழ்த்தரமாகவும் மட்டமாகவும் செய்துவிட்டு அப்புறம் அவற்றை அநுசரித்துத்தான் வாழ வேண்டுமென்றும் சொல்லிக்கொள்வதனால் என்ன பிரயோ சனம் நடைமுறைகளை முதலில் மாற்றுங்கள். செருப்புக் குத் தகுந்த கால்களைத் தேடித் திணிக்காதீர்கள். காலுக் குத் தகுந்த செருப்பை அணிய வாய்ப்பளியுங்கள். நிர்ப்பந்த மாக நடைமுறைகளை ஊழலாக்கிவிட்டு அப்புறம் அந்த ஊழல்களுக்குத் தகுந்தாற்போலத்தான் சமாளித்துக் கொண்டு அநுசரித்துப் போகவேனும் என்று கையாலாக்ாத வேதாந்தம் பேசுவதே ஒரு சீலைப்பேன் வழக்கமாகப் போய் \ * விட்டது. இங்கே." -
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/190
Appearance