பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 g {} - . . பொய்ம் முகங்கள் - ரகுவின் டுட்டோரியல் காலேஜிலும் வேலை பார்த்தார். அவர். இன்ஸ்டிடியூட்டில் பண வசூல்-சம்பளம்-வசூலிக்கும். நாட்களில் இங்கு அவர் வரமாட்டார். வருகிற நாட்களில் மாணவர்களுக்குக் கத்தை கத்தையாக 'சைக்ளோஸ்ட்” செய்த நோட்ஸ்களைக் கொடுத்துவிடுவார். சுப்பையனுக் குப் பயங்கரமான பணத்தாசை. சென்னை நகரின் ஒவ்வொரு பேட்டையிலும் ஒரு கமர்ஷியல் இன்ஸ்டிட்யூட் டைத் திறந்து நடத்தி ஏராளமாகப் பணம் பண்ணா வேண்டும் என்ற பேராசை அவருக்கு உண்டு: "பணம் பண்ணத் தெரியணும் சார்! பணம் பண்ணத் தெரியாட்டி இந்த ஊர்லே ஒருத்தன் உங்களை மதிக்க மாட்டான். பல சரக்கு வியாபாரி எப்பிடிப் பேட்டைக்குப் பேட்டை புதுப் புது பிராஞ்ச் திறந்து வியாபாரம் பண்றானோ அப்பிடியே படிப்பையும் அங்கங்கே விற்கத் தெரியணும்.’’ என்பது தான் சுப்பையன் அடிக்கடி பிறரிடம் உதிர்க்கும் பொன் மொழி. - சுப்பையனுடைய படிப்பு விற்பனைத் தத்துவத்தை, நினைத்துவிட்டு இரண்டு. நாட்களுக்கு முன் பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் தான் கேட்ட ஒரு நயமான உரத்த சிந்தனைக்குரிய சொற்பொழிவையும் ஒப்பிட்டு: எண்ணிப் பார்த்தான் சுதர்சனன். . "இந்தியாவில் விளைய வேண்டிய முன்னேற்றங்களும், வளர்ச்சிகளும் விளையாமல் இருக்கத் தடைகளாயிருப்பவர் கள் வெளியே வேறெங்கும் இல்லை. அவர்கள் இந்தியா வுக்குள்ளேயேதான் இருக்கிறார்கள். குடிசைகளும் சேரி களும், இருக்கிறவரைதான் அவற்றிைச் சரி செய்வதாக ஒவ்வொரு தேர்தலிலும் மக்களிடம் ஏதாவது பேசிக் கொண்டிருக்கவும் உறுதியளிக்கவும் வாய்ப்பு உண்டு என்று எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளும் அவற்றை அதாவது குடிசைகளையும்சேரிகளையும் அப்படியே இன்னும் பேணி. காக்க விரும்புகிறார்கள். அறியாமை அறவே ஒழிந்து விட்.