உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 191 டால் பின்பு தங்களுடைய தனித்துவமும் சிறப்பும் போய்க விடுமோ என்று கருதி அறிவாளிகள் ஒரளவு அறியாமை" எக்காலத்திலும் நாடு முழுவதும் 'ஸ்டாக் இருக்கும்படி ஒரு சீராகக் கவனித்துக் கொள்கிறார்கள். தாங்கள் செழிப்பை உண்டாக்குவதாகப் பிரச்சாரம் செய்யப் போதுமான "வறும்ை நாட்டில் எப்போதும் ஸ்டாக் இருக்கும்படி வறுமையை ஒழிக்கப் பாடுபடவென்றே அவதாரம் செய் திருப்பவர்கள் நினைக்கிறார்கள். சாதி வேறுபாடுகள் அற்றத்க்ாழ்வுகளை ஒழிப்பவர்களின் கன்தயும் இதுதான். ஒரு சில மாதங்களிலோ, வருடங்களிலோ சாதிகளும், ஏற்றத் தாழ்வுகளும் போய்விட்டால் அப்புறம் தாங்கள் எதை ஒழிக்கப் போவதாகச் சவால் விடுவது என்று தயங்கியே அவற்றை முழுமையாக ஒழித்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். பள்ளிக்கூடங்களும் கல்லூரி களும், பல்கலைக் கழகங்களும் போட்டி போட்டுக்கொண்டு நாட்டில் அறியாமையையும் சாதிபேதங்களையும் வளர்க் கின்றன. நான் வெற்றி வாகை சூடுவதற்காகவே பிறர் தோற்கும் வாய்ப்புக்கள் நேரவேண்டும் என்று ஒவ்வொரு வெற்றி ஆசைக்காரனும் நினைக்கிற நாடு இந்தியா. வறுமை, சாதி வேறுபாடு, ஏற்றத்தாழ்வு. கல்வியறி வின்மை, குழப்பங்கள், இவை எல்லாம் ஒவ்வொரு தேர்த விலும் ஜெயிக்க விரும்புகிறவர்களுக்குத் தேவைப்படு கின்றன. ஆகவே வறுமை, சாதி வேறுப்ாடு, அறியாமை இவை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நாட்டிலிருந்து ஒழிந்து விடாமல் அவர்கள் இங்கே முனைந்து கவனித்துக் கொள் கிறார்கள். பலர் அறியாதவர்களாக இருந்தால்தான் ஒருவனை அறிவுமேதையாக நம்புவார்கள் என்று கருதும் நாடு இது. மற்றவர்களுக்கு முழு வளர்ச்சி வந்துவிட்டால் தங்களை அப்புறம் மதிக்கமாட்டார்களோ என்று தயங்கித். தயுங்கிச் செயல்படுகிற ஐந்தாம்படை அறிவாளிகள் நிறைந்திருப்பதும் இங்கேதான். பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு விடாது. ஆனால் உலகமே. இருண்டு விட வேண்டும் என்று கருதித் திட்டமிட்டுத் தவம்