பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 94 : பொய்ம் முகங்கள்

    • Firtři ரொம்ப உணர்ச்சிவசப்படறாரு. உலக அதுபவம் பத்தாது...நாளாக நாளாகச் சரியாயிடுவாரு'என்றார் சிண்டிகேட். ی:

அதாவது தப்பு-ஊழல்-லஞ்சம் ஏமாற்றுதல், பணம் பன்னுதல், இதையெல்லாம் எதிர்த்தால் உலக அநுபவம் இல்லாதவன்னு அர்த்தம். இதை எல்லாம் கொஞ்சம், கொஞ்சமா ஏத்துக்கிற அளவுக்கு மரத்துப் போயிட்டா அவனுக்கு உலக அனுபவம் வந்து விட்டதுன்னு அர்த்தம். சுதர்சனின் குரலிலிருந்த தார்மீகக் கோபமும் சத்திய ஆவேசமும் சிதம்பரநாதனை ஒரிரு கணங்கள் பதில் பேச விடாமல்தடுத்துத் தயங்க வைத்தன். அதற்குள் டிரான் ஸ்ஃபர் தொல்லைக்கு ஆளாகி வந்திருந்த பேராசிரியர் குறுக்கிட்டுப் பேசினார். - - -- யதார்த்த நிலைமையும் அப்பிடித்தானே இருக்கு? அதைத்தானே சார் நமக்குச் சொல்றார்? யூனிவர்ஸிடியிலே வியாபாரம் பண்ணாதவன் யார்? எக்ளப்ாமினேஷன் போர்டு மெம்பர்ஸ் ஒவ்வொருத்தனும், சீஃப் எக்ஸ்ாமினரும், போர்டு மெம்பர் அல்லது சீஃப் எக்ஸ்ாமினர்னு வெட்டர் ஹெட்டிலேயே பிரிண்ட் பண்ணி வச்சிக்கிட்டிருக்காங்க. இது இதுக்கு இன்ன இன்ன ரேட்னு அட்வர்ட்டிஸ்மெண்ட் டாரீஃப் போடற மாதிரி-ஏஜென்ஸி, சப் ஏஜென்ஸி, டீலர், ஸ்ப்-டீலர் எல்லாம் போட்டு வேலை நடக்குது. ஒருத்தன் முனு வருசம் எக்ஸாமினராக இருந்தா வீடு கட்டிடறான். சிஃப்எக்ஸ்ாமினரா இருந்தாலோ காபி எஸ்டேட் வாங்கிட றான். என்னைப் போல ஒரு பேராசிரியருக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேர மூளை வேலைக்கு மாதச் சம்பளம் ஆயிரம், இரண்டா யிரம்னு சுளைகளையாகக் கிடைசசாலும் பேராசை போக மாட்டேங்குது, ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் கடின உடலுழைப்பில், ஈடுபடுகிற தொழிலாளி ஒருத்தன் மாதம் முன்னூறு நானூறு ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியாத இதே நாட்டில்தான் நாங்க சிலமணி நேர மூளை உழைப்புக்காக ஆயிரமாயிரமாகச் சம்பாதிக்கிறோம். -