1 96 பொய்ம் முகங்கள் இங்கே ஒரு பாவமா ரெண்டு பாவமா? கல்வி இலாகா முழுவதுமே பாவங்களின் முட்டையா இருக்கு. சாதி வெறி. குரூப்பிலம், பணப் பேராசை, பழிவாங்குதல், அறியாமை. முரண்டு, கொண்டது விடாமை, கொள்கையின்மை, இதெல்லாத்தையும் ஒண்னு சேர்த்தால் அதுதான் நம்ம. கல்வி இலாகா. யூனிவர்ஸிடி போர்டு ஆஃப் ஸ்டடீஸ்லே பாடப் புத்தகம் தேர்ந்தெடுக்கறப்போ படிக்கிற மாணவர் களை நினைச்சுத் தேர்ந்தெடுக்கறதில்வே எக்ஸாமினேஷன் போர்டிலே இருக்கிறவர் தயவு இந்தப் போர்டிலே இருக்கிற, வருக்கு வேணும்னு அவர் புத்தகத்தை இவர் பாடமா வச்சுடலாம். 'அந்தப் புலவர் பொன்னம்பலனார் அஞ்சாறு. பொண்ணைப் ப்ெத்துப்பிட்டாரு. ஒண்ணொண்ணுக்கும். கட்டிக் குடுக்க ஐயாயிரம் பத்தாயிரம் செலவாகும். பாவம் அவர் சம்பாதிச்சிக்கட்டும்னுதான் போனவருஷம் எஸ்.எஸ். எல்.சிக்கு நான் டீடயிலாக இருந்த மண்ணும் விண்ணும் மதிக்கும் வள்ளுவர் மாண்பு-என்னும் கட்டுரைத் தொகு, தியை இந்த வருசம் பி. யூ.சிக்கு நான் டீடயிலாகப் போட் டிருக்தோம்'னு காரணம் சொல்லுவாங்க. டீடயில்டு ஸ்டடிக்கு வைப்பதைவிட லைட்ரீடிங்காக நான் டீடயில்டு. ஸ்டடிக்கு வைக்கணும்னு பேரு. ஆனா இங்கே டீடயில்டு. ஸ்டடியைவிடக் கடினமான வியாசங்களை நான் டீடயில்டு ஸ்டடிக்கு வைப்பாங்க். காரணம் யாராவது ஒருத்தர் பொண்ணுக்குக் கலியாண்த்துக்குச் செலவழிக்கப் பணம் சேர்த்தாகணும். பையன் ஆறாவது வகுப்பிலும் மண்ணும்: விண்ணும் மதிக்கும் வள்ளுவர்தம் மாண்பை'ப் படிக்கனும், பி.யூ சியிலும் அதையே படிக்கணும். பி.ஏ.யிலும் அதையே, படிக்கணும். போஸ்ட் கிராஜுவேட் வகுப்பிலும், அதையே வடிச்சுத் தீரனும் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறு: கிறவரை அவன் தன் புத்தியை ஒரே விஷயத்துக்கு அடகு, வைக்கிற நிர்ப்பந்தம் இங்கே இருக்கும்.' "வள்ளுவரை மட்டும் தனியே படிச்சால்கூடத். தப்பில்லை. ஒரே குறளுக்கு ஒவ்வொரு நிலையிலும் படிக்கிற போது புதிய புதிய பொருள். நயங்கள் விரிவுபட்டுத்.
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/198
Appearance