பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 197 தோன்ற வழி இருக்கிறது. புலவர் பொன்னம்பலனார் போன்றவர்களின் அரைத்த மாவை அரைக்கும் விளக்கங்கள் மூளையைக் காயடித்து விடும். . அதை யார் தட்டிக் கேட்கப் போறாங்க? யூனிவர் விடிகள் சம்பந்தப்பட்ட எல்லாம்ே அப்பிடித்தான் இருக்கு, மூணு வருஷம் ஒருத்தர் எக்ஸ்ாமினரா இருக்கார்னா மூணு வருஷத்திலே எவ்வளவு சேர்த்துக்கொள்ள வழி உண்டுன்னு: தான் பார்க்கிறாங்க. இந்த நாட்டிலே படிச்சவங்களுக்கு இருக்கிற பணத்தாசை படிக்காத ஏழைப் பாமர மக்களுக் குக்கூட இல்லை. இளம் பெண்களானால் அழகையும், கற்பையும் இலஞ்சமாக வாங்கிக் கொண்டு மார்க் போடுகிற வர்கள் இருக்கிறார்கள். இரண்டு பாட்டில் விஸ்கி கொண்டு போய்க் கொடுத்தால் மார்க் போடுகிறவர்கள் இருக்கிறார் கள். காஞ்சீபுரம் பட்டுப் புடைவை-பெரிதாகப் பளபள வென்று ஜரிகை போட்டதாக ஒண்ணோ ரெண்டோ வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்தால் மார்க் போடுகிற வர்கள் இருக்கிறார்கள். நெல்லூர் அரிசி மூட்டை ரெண்டு அனுப்பி வைத்தால் மார்க் போடுகிறவர்கள் இருக்கிறார் கள். இருநூறு ரூபாயோடு பெங்களுருக்கு ப்ளேன் டிக்கெட் வாங்கிக் கொடுத்தால் மார்க் போடுகிறவர்கள் இருக்கிறார் கள், அப்புறம் எதுக்குப் பரீட்சை-பாஸ்-ஃபெயில், ஃபர்ஸ்ட்கிள்ாஸ், ஸ்ெகண்ட் கிளாஸ், கிரேடிங் சிஸ்டம் எல்லாம் என்ன இழவுக்காகன்னுதான் புரியிலே?" எல்லாத் தொழில்லேயும் சம்பளம் கிம்பளம் இரண்டு. வகை வந்தாச்சு: அதுதான் சங்க காலத்திலேயே உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் கற்றல் நன்றே' என்று பாடி வச்சிருக்கான். சில புலவர்களே இப்பல்லாம் இந்தக் கொட்டேஷனைப் புது அர்த்தத்திலே விளக்கிச் சொல்றாங்க. உற்றுழி உதவுதலாவது பெங்களூருக்கு ப்ளேன் டிக்கட்டும் ரொக்கமும் கொடுத்தல் முதலிய இன்னோரன்னபிற. உறுபொருள் கொடுத்தலாவது நிறைய பொ-13 - -