உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பொய்ம் முகங்கள் "அதெப்படித் தெரியாமப் போகும்? மேலேதான் தெளிவா என் பேர் எழுதியிருக்கே...?’’ எனக்கென்ன சார் தெரியும்? அவரையே வேணாக் கேளுங்க. அவர் சொல்லியனுப்பிச்சதை நான் சொன்னேன். என்னை ஏன் கோபிக்கிறீங்க? நானா பிரிச்சேன்?" பியூனைக் கோபிப்பதில் பயனில்லை என்றே சுதர்சன ம் நினைத்தான். அன்றொரு நாள் முல்லை மலர்ப் பத்திரிகையிலிருந்து சன்மானமாக செக்' வந்த கவரைக் கூட இப்படித்தான் பிரித்துப் பார்த்துவிட்டு அனுப்பியிருந் தார் தலைமையாசிரியர். கேட்டதற்கு வேணும்னா பிரிச் சேன், ஏதோ ஸ்கூல் தபாலாக்கும்னு தெரியாமப் பிரிச்சுட் டேன். அதுக்காகத் தலையைச் சீவிடுவேளோ?'-என்று பதில் சொல்லியிருந்தார் அவர். - - . . . . . . இன்று ரேடியோ உறையையும் பிரித்திருப்பதிலிருந்து அவர் தன் கடிதங்கள் எல்லாவற்றையும் வேண்டுமென்றே .பிரித்துவிட்டு அப்புறம் மன்னிப்புக் கேட்பதை வழக்கப் படுத்திக் கொண்டிருப்பதைச் சுதர்சணன் புரிந்து கொண் டான். - > பாடவேளை முடிவதற்கான மணி அடித்தது. சுதர்சனன் அந்த வகுப்பிலிருந்து வெளியேறி மறுபடியும் ஆசிரியர்களின் ஒய்வு அறைக்குச் சென்றான். அது இடை வேளை நேரமாதலால் ரீஸஸ் ஐந்து நிமிஷம் ஓய்விருந்தது. - சுதர்சனனின் அடுத்த பாடவேளை மாணவிகளும் சேர்ந் திருந்த ஒரு கூட்டு வகுப்பில் இருந்தது. ஆசிரியர்கள் அறை யில் சீனியர் தமிழ்ப் பண்டிதர் பிச்சாண்டியா பிள்ளை எதிர்ப்பட்டார், அவர் அவனைக் கேட்டார்: - என்ன சுதர்சனம் நீங்க நோட்ஸ் ஆப்லெஸ்ன்' எழுதி வைக்கிறதில்லேன்னு ஹெச்.எம், புகார்பண்றாரே?" எழுத நேரம் இருந்தால்தானே சார்? ஒண்ணுரெண்டு லீஷர் பீரியடையும் ஸப்டிடியூட் ஒர்க் போட்டு அனுப்பி வச்சிடறாரு. அந்த ஸ்ப்டிடியூட் ஒர்க் மெமோவையும். ஹெச்.எம். தானே போட்டு அனுப்பறாரு'- -