உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98 பொய்ம் முகங்கள் ரொக்கமும் பிறவும் கொடுத்தல். கற்றல் நன்றாவது-நல்ல கிரேடு வாங்குதல். சங்கப் புலவரின் தீர்க்க தரிசனத்தை என்னென்று கூறுவது? உற்றுழி உதவுதலும் உறுபொருள் கொடுத்தலும் வழி வழி வந்தவை எனப் பொருள்படுமாறு கூறிய பெருமைதான் என்னே! என்னே!!' - ...உடலுழைப்புக்காரர்களுக்கு இல்லாத இன்னொரு வசதியும் சில அறிவுத்துறைப் பேராசிரியர்களுக்கு உண்டு. முக்கால்வர்சி நாள் பட்டிமன்றம், கவியரங்கம், சொற் பொழிவுன்னு ஊரெல்லாம் காடு மேய்ந்து விட்டு மீதி நாட் களில் முடிந்தபோது வகுப்புக்கு வந்தால் போதும்! பாடங் களை முன்பே சரிபார்த்துக் குறிப்புக்கள் தயாரித்துக் கொண்டு வரவேண்டும் என்பதில்லை. அவ்வப்போது தோன்றியபடி எதையாவது பூசிமெழுகிச் சொல்லியே சமாளித்துக் கொள்ளலாம். - - "எல்லாருக்கும் இது பொருந்தாது. நல்ல பேராசிரியர் களும், நாணயமான அறிவு உழைப்பாளிகளும் கணிசமான அளவில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். காடு மேய் கிறவர்கள் எல்லாத் துறையிலும்தான் இருக்கிறார்கள். நாட்டில் சுய கட்டுப்பாடும் பொது ஒழுக்கமும் இல்லாதது தான் மொத்தத்தில் காரணம்- - "இன் திஸ் டேய்ஸ் நோ ஒன் இஸ் வில்லிங் டு லேர்ன்' "அதிலே தப்பென்ன? படிக்காமலே பாஸ் பண்ணகிரேடு வாங்க எல்லாம் வழி இருக்கறப்ப எதுக்கு வீணாப் படிக்கணும்?' - ரொம்ப நல்ல கேள்விதான். ஆனால் இதற்குப் பதில் சொல்லும் அல்லது விடை காணும் பொறுப்பு பாரிடம் இருக்கிறதுன்னு தான் புரியலை. இந்த நாட்டில் இன்றுள்ள மிகப் பெரிய துரதிர்ஷ்டம் பல பிரச்னைகளுக்கு விடை சொல்ல வேண்டியவர்களும், அந்தப் பிரச்னைகளை உரு வாக்கிய குற்றவாளிகளுமே விடை சொல்வதற்குப் பதிலாக மேலும் சில வினாக்களைத் தொடுத்துவிட்டு நை ஸாகத்