பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பொய்ம் முகங்கள் யாரும் பார்க்கமாட்டாங்க. உத்தியோகத்துக்குத்தான் தகுதி. பதவிக்கு அதெல்லாம் இல்லே.' - வேலைதான் கிடைக்க்லே. வேலையைத் தேடிப் போனா முதல்லே பி. எச்.டி.யைத் தேடிக்கிட்டு அப்புறம் வேலைக்கு வாங்கறாங்க. பி.எச்.டி.க்கு ரிஜிஸ்தர் பண்ணப் போனாலோ அங்கே ஆயிரம் பாவிடிக்ஸ் இருக்குங்க. ஏற். கனவே பி.எச்.டி. வாங்கினி வங்க சில பேருதான் கய்டு' ஆக முடியும். புதுசா யாரும் பி.எச்.டிக்குப் பதிவு பண்ணிக் கிறதோ, தீஸிஸ் எழுதறதோ. பி.எச்.டி. வாங்கறதோ கப்டு’ங்களுக்கே பிடிக்கறதில்லை...' - "அப்புறம் அவங்க எப்படி ரிஸர்ச் ஸ்டூடண்ட்ஸுக்கு வழிகாட்ட முடியும்' - - சார்! நீங்க ரொம்ப ஃப்ராங்காப் பேசறதைப் பார்த்ததுமே எனக்கு உங்களைப் பிடிச்சுப் போச்சு. ஒரு சீனியர் புரொபசர்-நான் அவரு பேரைச் சொல்ல விரும்ப வில்லை-ஒரு பொண்ணுக்கு ரிஸர்ச் கய்டாக இருந்தாரு. ஆராய்ச்சித் தலைப்பு கலிங்கத்துப் பரணியில் கடை. திறப்புக் காட்சி என்று கொடுத்திருந்தாங்க. அதிலே ரிஸர்ச்சுக்கோ, திளிஸ்-சக்கோ பிரமாதமா ஸ்கோப்: ஒண்னும் இல்லே. ஆனாலும் வழிகாட்டியாக வாய்த்த: புரொபலருக்கு என்னமோ அந்தத் தலைப்புத்தான் பிடிசி சிருக்கு. வழிகாட்டறப்பவே நடுநடுவே அவரு பிரமாதமான யோசனைகளெல்லாம் சொல் லி க் குடுத்திருக்காரு. 'படுக்கையறைக் காட்சிகளெல்லாம் தத்ரூபமா வரலே. உங்களுக்கு அநுபவம் பத்தாது'ன்னிருக்காரு அந்தப் பெண்ணைப் பார்த்து. அது கலியாணமாகாத பெண்ணு முதல்லே ஒண்னும் புரியாம முழிச்சிருக்கு, அப்புறம் இந்தப் புரொபசரே அதுக்கும் கய்ட்' பண்ணியிருக்காரு. தீவிஸ், முடிஞ்சு எவல்யூடர்ஸ்-க்குப் போயி அவங்க அபிப்பிராய மும் சொல்லி முதன்மையாகத் தீர்ப்புக் கூற வேண்டிய சீனியர் ஆய்வாளர் வ்ைவாவோஸி’க்கு (நேர்முகத் தேர்வு). அழைத்திருக்கிறார். அவரும் அதே பழைய கேள்வியைக்