உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசார்தி - 263 கேட்டிருக்கிறார். 'என்னம்மா காதல் காட்சிகளை உணர்ந்து எழுதலேயே நீ? ரீ ஸ்ப்மிஷனுக்குச் சிபாரிசு பண்ணி எழுதட்டுமா'ன்னு வார்த்தைகளை இழுத்திருக் காரு-உடனே அந்தப் பொண்ணு பயந்து பதறிப் போய் "சார் தயவுசெய்து இழுத்தடிக்காதீங்க சார்! உண்ர்ந்து எழுதறது'ன்னா புரியலே...நீங்கதான் வழிகாட்டனும்’னு சொல்லி இருக்கு. அப்புறம் அவரும் அவருடைய புரொபஸர் பண்ணினமாதிரியே கய்ட் பண்ணிட்டு பி.எச்.டி அவார்ட் பண்ணலாம்னு சிபாரிசு பண்ணியிருக் காரு. இப்பிடி ரெண்டு தடவை ரெண்டு படுக்கையறைக் குள்ளே போனப்புறம் தான் அந்த விஷயத்திலேயே வெற்றி யடைய முடிஞ்சிருக்கு, பொம்பிளையானால் இப்பிடி. ஆம்பளையானால் பணம் லஞ்சம் அரசியல் செல்வாக்கு அல்லது அரசியல்வாதியின் பிரஷர்னு ஏதாச்சும் இருக் கனும், - 'இந்த நாட்டிலே முக்கால்வாசிப் படிப்பாளிகள் அயோக்கியத்தனத்தையே ஒரு "ஆர்ட்டா டெவலப். பண்ணிக்கிட்டிருக்காங்க. எல்லா விதமான கீபொளி. ஷன்ஸிலேயும் இப்பிடி யாராவது இருக்காங்க." ஏற்கெனவே பி. எச்.டி. வாங்கின. சில பெரிய ஆட் களோட திஸிஸ்' இதுவரை அச்சிலேயே வெளிவரலே. காரணம் என்னதெரியுமா? அதெல்லாம் அச்சிலேவந்தாக்கா இன்னிக்கு அதைப் படிக்கிற சாதாரண ஸ்டுடண்ட்ஸ் கூடச் சிரிடா சிரின்னு சிரிப்பாங்க. அத்தனை எலிமெண்ட்ரி" யான விஷயங்களை சிறுபிள்ளைத்தனமா எழுதி எப்பி டியோ பி.எச்.டி. வாங்கியிருகாக்ங்க, அதே சமயத்திலே புதுசா யார் பி.எச்.டி.க்கு ரிஜ்ஸ்டர் பண்ண வந்தாலும் வயித்தெரிச்சல் படறாங்க. சில பேருக்குத் தீவிஸ் எழுதித் தர வாடகைக்கு நல்ல ஆளுங்ககூடக் கிடைக்கிறாங்க." உங்களை மாதிரி நாலு இளைஞர்கள் பயந்து போய் அட்ஜஸ்ட்பண்ணிக்கிறீங்க. அதுனாலே அவங்க எல்லாருமே தங்களுக்குப் பயந்து அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்னு நெனைச்