பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 சுதர்சனன் அப்போது திடீரென்று ஆவேசம் வந்த வனைப் போலப் பேசலானான். - - -

புரட்சி என்கிற கூரான-ஆழமான வார்த்தையைக் கூட மேடைகளிலே பேசிப்பேசிக் காயடிச்சு முனை மழுங்கப் பண்ணிட்டோம் இங்கே. எல்லாமே நாளடைவில் வெறும் ச்டங்காக முனை மழுங்கிப் போய்விடுகிற நாட்டிலே எந்தப் புரட்சியும் விளையாது.' -

'உங்க பேச்சைக் கேட்டால் எதோ டானிக் சாப்பிட்ட மாதிரித் தெம்பா இருக்கு. ஆனா அதே சமயத்திலே வாழ்க்கைக் கவலையும்-பொழைப்பைப் பத்தின நினைவும் வருது சார்' என்றார்-வேலை தேடி வந்த இளைஞர். "வாழ்வதற்குப் பொழைக்கவேண்டியதுதான். ஆனால் சுயமரியாதையோட பிழைக்கனும்கிற உறுதி வேணும். சேரிட்டி பிகின்ஸ் அட் ஹோம்பாங்க. சேரிட்டி மட்டு மில்லே, மொராலிட்டி, கிரடிபிலிட்டி, சின்ஸியாரிட்டி முதலியதும் நம் மகிட்ட இருந்துதான் தொடங்கணும்.' - 'நீங்க சொல்றதிலே ஒரு வார்த்தைகூடத் தப்பு இல்லே. அப்பிடியே ஒப்புக்கொள்கிறேன். எந்த ஒரு வாச. லாவது திறந்திருக்கும்னு போனாலும் ஏமாற்றம்தான் மீத மாயிருக்கு. எல்லா வாசலும் எல்லா வழியும் அடைச்சிருக்கு ஏலவாக்கம் குலாப்தாஸ் மோகன்தான் காலேஜிலே ஒரு வேகன்ஸி இருக்குன்னு தெரிஞ்சு தேடிப் போனேன். காலேஜ் நிர்வாக போர்டிலே ஒருத்தர் மனசு வச்சா நிச்சயம் வேலை கிடைக்கும். அவரைத் தனியே போய்ப் பாருங்கன்னாங்க. போய்ப் பார்த்தேன். முதல்லே ஆர்டர் போடறத்துக்குமுந்தி ஐயாயிரமும் அப்புறம் நிரந்தரம்ாகும். போது இன்னொரு மூவாயிரமும் ரொக்கமாக் கேட்கிறாரு.. ஒரு வருஷம் பூராச் சம்பாதிச்சாக்கூட அவ்வளவு பணம் வராது. தொழிலதிபர்களும், பெரும் பணக்காரர்களும்