உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பொப்ம் முகங்கள் அவங்க தொடங்கற ஸ்கூல்களையும், காலேஜுங்களையும் கூட லாபம் தரக்கூடிய ஒரு புது இண்டஸ்டிரி மாதிரித்தான் தொடங்கறாங்க. அந்தக் காலேஜையோ ஸ்கூலையோ தொடங்கறபோது செலவழிக்கிற கெர்ஞ்சப்பணத்தைக்கூட. ஒரு இன்வெஸ்ட்மென்ட் ஆக எண்ணித்தான் செலவழிக். கிறாங்க, அட்மிஷனுக்குப் பணம், வேலைக்குப் பணம், பில்டிங், லைப்ரரி, லாபரேடரி, எல்லாத்துலயும் பணம்னு மழைபெய்யறதுபோல ஒரு காலேஜ்லேருந்தோ ஹைஸ்கூல் லேருந்தோ வருமானம் வெள்ளமாக் கொட்டுது! அதைப் பார்த்து ஒவ்வொருத்தரும் புதுசு புதுசாக் காலேஜ், ஸ்கூல்னு தொடங்கிக்கிட்டே இருக்காங்க. இத்தமாதிரி எஜுகேஷன் சூப்பர் மார்க்கெட்டு'ங்களாலே விற்கிறவங் களுக்குத்தான் கொள்ளை லாபம். வாங்கறவங்களுக்கு. ஒரே நஷ்டம்.” - 'நம்ம கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் நாணய மில்லாத பேராசை பிடித்த வியாபாரிகளால் நடத்தப்படு கிற வெறும் எஜுகேஷன் ஷாப்புகளாகவும் எஜுகேஷன் சூப்பர் மார்க்கெட்டு'களாகவும் ஆகி ரொம்ப நாளாச்சு. ரேஷன் கார்டுக்கு இருக்கிற மரியாதைகூட யூனிவர்ஸி.டி. டிகிரிக்கு இல்லே. ரேஷன் கார்டை அடமானமா வச்சுக் கிட்டு பத்து ரூபாய் கடன் தர்ரதுக்கு மார்வாரிங்க தயாரா யிருக்காங்க. டிகிரியை நம்பி அஞ்சு பைசாக்கூடத் தர்ரத், துக்கு எவனும் எங்கேயும் யார்ாயில்லே. - "புதுசு புதுசாக் காலேஜு, புதுசு புதுசா யூனிவர்ஸிடி எல்லாம் தொடங்கிக்கிட்டே இருக்காங்க. ஏற்கெனவே படிச்சு வெளியிலே வந்தவனுக்கே வேலை இல்லே. கல்வி. யினோட பிரயோஜன்ம் சுருங்கிப் போச்சு. மெட்ராஸ்லே படிக்கிறவன் பம்பாயிலே போய் வேலை தேடலாம்னா முடியிலே. பம்பாயிலே படிச்சவன் இங்கே வந்து வேலை தேடலாம்னா ஒத்துக்கல்லே. இங்கே படிக்கிறவனுக்குஇந்தி கிடையாது. இங்கிலிஷ-ம் சுமார். அங்கே படிக்கிறவனுக்கு தென்னிந்திய மொழிகளிலே பற்றாக்குறை. உலகளாவிய சர்வதேச குணமாக இருக்க வேண்டிய கல்வி, ஞானம்.