நா. பார்த்தசாரதி 297 இதையெல்லாம்கூடப் புரொவின்ஷியலாகவும், ரீஜனலாக வும் ஆக்கிக் கெடுத்துட முடிஞ்ச எக்ஸ்பர்ட்டுங்க இந்தியா விலேதான் இருக்காங்கன்னு தெரியுது.' - 'இந்தியாவிலே அது ஒண்ணுலே மட்டும்தானா எக்ஸ்பர்ட்டுங்க இருக்காங்க? அத்தனை கெட்ட காரியங் களுக்கும் போதுமான எக்ஸ்பர்ட்டுங்க நம்மகிட்ட இருக் காங்க. சாதியை ஒழிக்கிறேன் பேர்வழியேன்னு வந்து சாதி களை வளர்க்கிறதிலே எக்ஸ்பர்ட்டுங்க இருக்காங்க. வேற்று. மைகளையும், ஏற்றதாழ்வுகளையும்போக்கிச் சமதர்மத்தை நிலைநாட்டப் போறேன்னு வந்து நிமிஷத்துக்கொரு வேற்றுமையையும், ஏற்றத் தாழ்வையும் பயிரிட்டு வளர்த் துக்கிட்டிருக்கிற எக்ஸ்பர்ட்டுங்களும் இருக்காங்க. தேசத் தைவிடத் தங்களைப் பெரிதாக நினைத்துக்கொள்ளும் முரண்டு பிடித்த தனி மனிதர்கள் நிறைந்த் நாடு இது" இங்கே இந்த நிலைமையிலே வேறென்ன எதிர்பார்க்க முடியும்? சீரழிய ஆரம்பித்திருக்கிற் தேசத்தைத் திருத்த லாம், சீரழிந்து முடிந்துவிட்ட தேசத்தையும் திருத்தலாம். தொடர்ந்து இடைவிடாமல் சீரழிந்துகொண்டே இருக்கிற தேசத்தை யாராலேயும் திருத்த முடியாது. ஒன்றை ஒழுங்கு செய்ய ஆரம்பிப்பதற்குள் நூறு விஷயம் கெட்டுப்போய் விடுகிற தேசத்தில் எதையுமே ஒழுங்கு செய்ய முடியாது. "இங்கே அநாவசியமாக அரசியல் பேச வேண்டாம். வீண் வம்பு வரும். கொஞ்ச நேரத்திலே சிண்டிகேட் சிதம்பரநாதன் இங்கே வரப் போறாரு, அவரு காதிலே’ விழறாப்ல யூனிவர்ளிடியைக் கிரிடிசைஸ் பண்ணிப்பேசறது. நல்லா இருக்காது. தயவு செய்து இங்கே யாரும் அரசியல் பேச வேண்டாம்’னு ஒரு பெரிய போர்டு எழுதச் சொல்லிப் பக்கத்துப் பெயிண்ட்'டுக் கடையிலே குடுத்திருக்கேன். போர்டுவந்ததும் மாட்டப் போறேன்' என்று திடீரென்று. ரகு கடுமையான குரலில் குறுக்கிட்டுக் கண்டித்தான். "ரொம்ப வேடிக்கைதாம்ப்பா! நீயே ஒரு கட்சியிலே. இருக்கே ஒரு தலைவரை வழிபடறே, அரசியல்லே அவர்
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/209
Appearance