2渤葛 பொய்ம் முகங்கள் சொல்றதை எல்லாம் அது சரியானாலும், தப்பானாலும் அப்பிடியே கண்ணை மூடிக்கிட்டுக் கடைப்பிடிக்கிறே. மத்தவங்க அரசியல் பேசறபோது மட்டும் ருத்திராட்சப் பூனை மாதிரி கண்ணை மூடிக்கிறதிலே என்னபிரயோசனம்? விபசாரம் பண்றவங்க அதைப் பத்திப் பேசறத்துக்கோ கேட் சித்துக்கோ பயப்பட்டுக் கிவொன்இ கேள்வி பட்டிருக்கேன். அதுமாதிரித்தான் இருக்கு இதுவும். பார்பர் ஷாப்பிலும், ஹோட்டலிலும், வெற்றிலை பாக்குக் கடை யிலும், லைப்ரரிகளிலும், 'இங்கே அரசியல் பேசவேண் டாம்’னு போர்டு மாட்டி வைக்கிற அளவுக்கு நம்ம நாட்டு அரசியல் அநாரோக்கியமா இருக்குன்னு தெரியுது. அரசியலைப் பற்றிச் சராசரி இந்தியங்க ரெண்டு பேர் பேசிக்க ஆரம்பிச்சா அது அடிதடியிலேதான் முடியும்னு தெரியுது. பயப்படாதே. எனக்கும் இவருக்கும் அடிதடி வராது. உன்னோட நாற்காலி, மேஜைகளை நாங்க உடைச்சிட மாட்டோம்-என்றான் சுதர்சனன். "ரகுவின் இசத்தில் சிசிேடுப்பு அதிகமாகி எள்ளும் கொள்ளும் வெடித்தது. சுதர்சனன் தன்னுடைய பேச்சுப் போக்கில் சொல்லியிருந்த ஒர் உதாரணம் ரகுவைக் கோபம் கொள்ளச் செய்திருந்தது. நட்பு. பழக்கம், மரியாதை எல்லாம் மறந்து போய்ச் சுதர்சனனைப் பொறுத்துக் கொள்ள முடியாத எல்லைக்கு ரகுவின் ஆத்திரம் முற்றி யிருந்தது. 'பண்றது எல்லாம். விபச்சாரம்-ஆனால் அதைப் பத்திப் பேசறத்துக்கோ, கேட்கிறத்துக்கோ மட்டும் பயம், கூச்சம்'-என்று அரசியல் பேசுவதற்கும் கேட்பதற்கும் கூசும் சராசரி இந்திய மத்தியதர வர்க்கத்தின்ருத்திராட்சப் பூனை மனப்பான்மையைச் சுதர்சனன் கிண்டல் செய் ததைத் தனக்கு மட்டுமென்று எடுத்துக் கொண்டு விட்டான் ரகு, தான் ஓர் அரசியல் கட்சியில் இருப்பதையும், ஒரு தலைவரைக் கடைப்பிடித்து நடப்பதையும் படுகேவலமான முறையில் கிண்டல் செய்யவே சுதர்சன்ை அந்தக் கடுமை
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/210
Appearance