2 1 0. பொய்ம் முகங்கள் என்று கூடச் சீறிவிழலாம். அது நேருவதற்குள் தான் நாகரிகமாக முந்திக் கொண்டு ஒதுங்கி விடுவது நல்லதென்று சுதர்சனனுக்குத் தோன்றவே அவன் பெட்டி படுக்கைகளை எடுத்து மூட்டைக் கட்டத் தொடங்கினான். - . "இந்தா உனக்குச் சேரவேண்டிய பாக்கிப் பணம்,'என்று ரகு நீட்டிய ரூபாய் நோட்டுக்களை எண்ணிப் பார்க்காமலே வாங்கிக் கொண்டான் சுதர்சனன், நடந்தவற்றால் ஒரு சிறிதும் கழிவிரக்கமோ வருத்தமோ, எதிர்காலத்தைப் பற்றிய பயமோ அவன் மனத்தில் இல்லை. ஒன்றுமே நடந்து விடாததுபோல் சகஜமாகத் தெருவில் இறங்கிப் பெட்டிப் படுக்கையை ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் வைத்தான் சுதர்சனன். - 28. சுதர்சனன் ஏறிக்கொண்ட சைக்கிள் ரிக்ஷா பைகி :ராப்ட்ஸ் சாலையில் திரும்பி ஓடிப் பெரிய தெரு என்ற குறு கலான சிறிய தெருவுக்குள் நிழைந்தபோது அந்தத் தெரு வில் வெள்ளம் போல் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. காய்கறி, பழவண்டிகளின் நெரிசலுக்கும் குறைவில்லை. சுதர்சனன் அழகு லாட்ஜ்-ரூம்கள் மாத வாடகைக்கு விடப்படும்’-என்ற புது போர்டைப் பார்த்து ரிக்ஷாவை நிறுத்தச் சொன்னான். புதிதாக ஒரு வீட்டை வாங்கி இடித்து மூன்று மாடிக் கட்டிடமாகக் கட்டி லாட்ஜ் ஆக்கியிருந்தார்கள். பொதுவாகத் திருவல்லிக் கேணியில் பெல்ஸ் ரோடு, பெரிய தெரு முதலிய சுறுசுறுப் பான பகுதிகளில் இப்படி ஒரு போர்டைக் காண முடிவதே அபூர்வம்தான். ஓர் அறையோ, அல்லது அறையில் ஒரு படுக்கையோ காலியாக இருந்தால்கூட உடனே யாராவது தேடி வந்துவிடுவார்கள். ஒரு வீடு காலியாகிறது அல்லது அறையிலிருப்பவர் ஒழித்துக்கொண்டு போகிறார் என்று
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/212
Appearance