பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 2 பொய்ம் முகங்கள் மற்ற இரண்டு சாவிகள் மற்றவர்களிடம் இருக்கின்றன. என்றும் சொல்லி மூன்றாவது சாவியை அவனிடம் கொடுத் திருந்தார் லாட்ஜ் உரிமையாளர். பெட்டி படுக்கையோடு மூச்சு இரைக்க இரைக்கப் படியேறினான் அவன். அறை திறந்தே இருந்தது. ஒரு படுக்கையில் தடிமன் தடிமனான புத்தகங்களுக்கு இடையே அரும்பு மீசை இளைஞர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். மற்றொரு படுக்கையில் ஒரே மருந்துப் புட்டிகள், அட்டை டப்பாக்கள், லேபிள்கள், அச்சடித்த, பாம்ப்லெட்டுகள் மயமாக இருந்தன. மூன்றாவது படுக்க்ை. காலியாயிருந்தது. சுதர்சனன் அறையிலிருந்த இளைஞருக் குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, மூன்றாவது அறைவாசியாக வந்திருப்பதாய்த் தெரிவித்தவுடன் காலியா யிருந்த படுக்கையைச் சுட்டிக்காட்டினார் இளைஞர். சுதர்சனன் விசாரித்தான்:-"நீங்க எங்கே வேலை பார்க், கிறீங்க? என்ன செய்யிறீங்க? நான் தெரிஞ்சுக்கலாமா? நான் என்னைப்பத்தி உங்களுக்குச் சொல்லி யாச்சு, இப்போ நீங்க. தான் உங்களைப்பத்தி எனக்குச் சொல் லணும். - х 'யான் ஆராய்ச்சி.மாணவன். தமிழ் முதுகலை முதல் வகுப்பில் தேறியபின் இப்போழ்தத்துப் பண்டாரகர்பட்டம் பெறுவான் வேண்டிப் பல்கலைக் கழகத்தில் பதிவு செய். துள்ளேன். பெயர் ஆறை அண்ணாதாசன். ஊர் ஆற்றுார்." எதிரே தெரிந்த கண், முகம், மூக்கு, வாய், காது. முதலிய மனித உறுப்புக்கள் எல்லாமே கரைந்துபோய், ஒரு. புத்தகம் பெரிய உருப்பெற்றுத் திடீரென்று எதிரே வந்து நின்று வாய் திறந்து பேசினாற் போலிருந்தது. அவர் ஒரு. தனித் தமிழ்வாதியாயிருக்க வேண்டும் என்று சுதர்சனனுக் குப் புரிந்தது. - * - "இந்தப் படுக்கையிலே இருக்கறது யாருங்க?' "அவர் ஒரு மருந்தாற்றுப் படுத்துநர். "அப்ப்டீன்னா? என்னது? புரியவீங்களே?" ஆங்கிலத்தில் மெடிகல் ரெப்ரஸெண்டிடிவ்' என் பார்கள். நீங்கள் ஒரு தமிழாசிரியர் என்று உங்களை