உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 - பொய்ம் முகங்கள் "கொஞ்சம் இப்படி வராந்தாவுக்கு வாங்கோ! குழந், தைகள் காதிலே விழறாப்லே நான் உங்களைக் கண்டிச்சா அது நன்னா இருக்காது. . அவன் அவரைப் பின்தொடர்ந்து வராந்தாவுக்குச் சென்றான். வகுப்பிற்குள் மாணவ மாணவிகள் இன்னும் நின்றுகொண்டுதான்.இருந்தனர். ஆனால் வகுப்பில் நாற்ப துக்கு மேற்பட்டவர்கள் நிற்கிற அரவமே இல்லை. அசாதா ரணமான அமைதி நிலவியது. - ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டு தலைமையாசிரீ யர் ஆரம்பித்தார். . . . இது உமக்கு என்னிக்குமே ஞாபகம் இருக்கணும் பொண்குழந்தைகள்-இருக்கிற கிளாஸ்லே சிரிச்சுப் பேசி அரட்ட்ை அடிக்கப்பிடாது. பார்க்கறவாளுக்குத் தப்பாப் படும். நீரும் வாலிப வயசுக்காரர். கிளாஸ்லே அஞ்சாறு வயசுவந்த பொண்கள்கூட இருக்கு." . . . it is * A - - - - -- to o - * * * * * * * * * * 'உம்ம வயசுக்கு இப்பிடி எல்லாம் சிரிச்சுப்பேசனும்னு ஆசையாய்த்தான் இருக்கும்...' - - 'எனக்கு அப்படி ஒண்னும் ஆசை கிடையாது சார்!’’’ "எதிர்த்துப் பேசவேண்டாம். நான் சொல்றதைக் கேட்டுண்டாப் போதும்...' சுதர்சனனுக்கு எதை. எதையோ பதில் சொல்லிவிட உதடுகள் துடித்தன. தலைமையாசிரியரோ பேசிக்கொண்டே அடுத்த வகுப்பை நோக்கி நடந்து விட்டார். அவனுடைய பதிலைக் கேட்டுக் கொள்ள அவர் தயாராயில்லை. ...” - நாலுபேர் சேர்ந்து கலகலப்பாகச் சிரித்துப்பேசுவதைக் கேட்கச் சகிக்காத அவருடைய மனப்பான்மை அவனுக்கு ஒருவாறுபுரிந்தது. அடுத்தவர்களுக்கு வருகிற த்பர்ல்களைப் பிரிக்கிறவர், டிரில் கிளாஸில் பெண்களோடு ஒடிப்பிடித்து - வின்ளயாட ஆசைப்படுகிறவர், எப்படிப்பட்ட போக்குள்ள வராக இருக்கமுடியும் என்பதையும் அவன் ஊகித்துக் கொண்டில்ான். - * - -