பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 & பொய்ம் முகங்கள் "நான் யாரையும் எதுவும் சொல்லலே! என்னிடம் மாட்டுவதற்குப் படங்கள் எதுவும் இல்லைன்னுதான் சொன்னேன்.” ஆறை அண்ணாதாசன் மறுபடியும் சுதர்சனனைச் ச்ந்தேகக் கண்களோடுதான் பார்த்தான். சுதர்சனனுக்கோ உள்ளுறச் சிரிப்பாயிருந்தது. பரம ஆஸ்தீகன் செய்யக்கூடிய அதே பூஜை புனஸ்காரம் வழிபாடுகளை வேறு விதமான முறையில் வேறுவிதமான படங்களுக்குச் செய்து வழிபட்டுக் கொண்டே தன்னை ஆஸ்திகனிலிருந்து வேறுபட்டவனாக நினைத்துக் கொள்ளும் இரண்டுங்கெட்டான் நாஸ்திகர் களை நினைத்தால் அவனுக்கு வேடிக்கையாயிருந்தது. முழுமையான ஆஸ்திகர்களுமில்லாமல் முழுமையான நாஸ்திகர்களும் இல்லாமல் தேசம் முழுவதுமே அரைகுறை: களாகவேர், இரண்டுங்கெட்டான்களாகவோ எல்லா வகை யிலும், நிரம்பியிருப்பதாகவே நினைக்கத் தோன்றியது. அவன் செய்வது தப்பு என்று உரத்தக் குரலில் கூப்பாடு: போட்டு விமர்சித்துக் கொண்டே தான் செய்யும் தப்புக் களைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் தப்புச் செய்து கொண்டிருக்கிறவர்கள்தான் தேசத்தில் அதிகமோ என்று. கவலையாயிருந்தது அவனுக்கு. ... 1 'காபி, சிற்றுண்டி அறைக்கு வாங்கிக்கொண்டு வந்து. தர வேண்டுமானால் பையன்களுக்கு கமிஷன் அதாவது கழிவுத் தொகை கொடுக்க வேண்டும்- என்று வேறு ஒரு விவரத்தைத் தொடங்கினான் ஆறை அண்ணாதாசன். "சொல்லித்தான் தெரியணுமா இது? மெட்ராஸ்ஊரே மொத்தத்திலே ஒரு கமிஷன் மண்டி மாதிரின்னுதான் நான் புரிஞ்சுக்கிட்டிருக்கேன். கமிஷன் தராமே இங்கே யாருக்கும் எதுவும் நடக்காதுன் னு, எனக்கு நல்லாத். தெரியும் தம்பி பொதுவா எனக்கு "ரூம்செர்விஸே " தேவைப்படாது. நானே கீழே இறங்கிப் போயி எல்லாம் பார்த்துக்குவேன். தன் கையே தனக்கு உதவி:ங்கிறதிலே எனக்கு ரொம்ப நம்பிக்கை உண்டு. -