பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி - 2.2 1 அப்படிப் பேர் வச்சுக்கிட்டும்கூட உங்களுக்கு ஒண்னுமே ராசியா ஆகலேன்னு தோணுதே' 'நானே இந்தப் பேரை வச்சுக்கிட்டு இப்போ மூணு மோசம்தானே ஆகுது?’’ - - "அதுக்கு முன்னாடி?" ' கூற்றுவன்’னு வச்சுகிட்டிருந்தேன். ஒரு பத்திரிகைக் காரன் என் நாடகத்துக்கு விமர்சனம் எழுதறப்ப, டைரக்டர் பேர் கூற்றுவன் என்று இருப்பதாலோ என் னவோ நாடகத்திலே எல்லாமே கூண்டோடு மாண்டுபோய் விட்டது. துணிந்து நாடகமே செத்துப் போய்விட்டது என்றுதான் கூறவேண்டும். கொல்வதுதானே கூற்றுவனின்" தொழில்’னு எழுதிட்டான். அதுக்குப் பின்னாடி தான் 'மதன் குமார்னு மாத்தி வெச்சுக் கிட்டேன். ' .' சுதர்சனன் சிரித்து ஓயச் சிலவிநாடிகள் பிடித்தனமதன் குமாரும் சேர்ந்து சிரித்தான். அந்த அழகு லாட்ஜ் முழுவதுமே ஒரு சிறிய உலகமாக இருக்கும் போலிருந்தது. விதம் விதமான மனிதர்கள், விதம்விதமான வாழ்க்கை, லட்சியங்கள், விதம் விதமான போக்குகள், எல்லாம் அதற் குள்ளேயே இருந்தன. சினிமா டைரக்டராகும்-லட்சியத் தில் பாதி வழிவரை ஓடிவந்து மேலே ஒட வழியின்றி நாடக டைரக்டராகவே இருக்கும் மத்ன் குமரர், படங்களை மாட்டி சிரத்தையாக பூஜை செய்யும் மெடிகல் ரெப்ரஸெண்டிடிவ், தனித் தமிழிலேயே பேசிச் சிரமப்படும் ஆறை அண்ணா தாசன், இன்னும் பல என் ஜி. ஒக்கள், கம்பெனி கிள்ார்க்கு கள், ஆசிரியர்கள் எல்லாரும் அந்த லாட்ஜின் அறைகள் என்ற சின்னஞ்சிறு கூண்டுகளில் இருப்பதாகப் பட்டதுபுறாக் கூண்டிலாவது ஒரு கூண்டுக்குள் ஒரே ஒரு புறா இருக்கிற சுதந்திரமும், சுகமும், எப்போதாவது கிடைத்து விடலாம். ஆனால் இந்தத் திருவல்லிக்கேணி லாட்ஜுகள் என்ற சிமெண்டுப் புறாக் கூண்டிகளில் ஒரே அறையில் எத்தனை பேர் அடைந்து கிடக்க வேண்டியிருக்கிறது? கலியாணமாகிக் குடும்பம் மனைவி என்று வந்தால்தான்