நா. பார்த்தசாரதி - £23 "இங்கே என் ரூம்லியே ஆறை அண்ணாதாசன்னு ஒரு. யூனிவர்ஸிடி ரிஸர்ச் ஸ்டூடண்ட் இருக்காரு, அவரு. சாதாரணமாப் பேசறப்பவே ஹிஸ்டாரிகல் டிராமாவிலே ஒரு கேரக்டர் டயலாக் பேசற மாதிரியே பேசறாரு. அவருக சாதாரணமாப் பேசறதெல்லாம். ஆயிரம் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முந்தின மனுசன் பேசற டயலாக் மாதிரி யிருக்குன்னாப் பார்த்துக்குங்களேன். அத்தினி சுத்தம். சும்மா தமிழ் கொஞ்சுது போங்க..." - ... - ஐயையோ வேண்டாம் சார்! அது மாதிரி நாடகத் தைப் பார்க்கறத்துக்கு இந்தக் காலத்து ஜனம் ஒண்னுகூட வராது. பயந்து ஒடிப்பூடும். டிக்கட் வாங்கிக்கிட்டு வந்து நாடகம் பார்க்கவும் ரெண்டாயிரம் மூவாயிரம் வருசத். துக்கு முந்தின ஜனங்களைத்தான் தேடிப் போய்க் கூட்டி யாறனும்.’’. . - சுதர்சனனுக்கு இதைக் கேட்டுச் சிரிப்பு அடக்க, முடியாமல் பொங்கிக் கொண்டுவந்து விட்டது. . 30 சில நாட்களில் அழகு லாட்ஜ் வாழ்க்கை சுதர்சன னுக்குப் பழகிவிட்டது. அதன் நடைமுறைகள், மனிதர்கள் மனப்போக்குக்கள் எல்லாமே சுதர்சனனுக்கு ஒரு வாறு பிடி பட்டு விட்டன. . . . . ; அந்த லாட்ஜ் உரிமையாளர் ஓர் அரசியல் கட்சியின் முக்கியப்புள்ளி. அப்பகுதியின் கார்ப்போரேஷன் கவுன் சிலர். அவருக்கு லாட்ஜ் தவிர ஒரு பலசரக்குக்கடை, ஒரு. எண்ணெய் மண்டி, நிறைய வாடகை வரக்கூடிய இரண்டு: பெரிய ஒண்டுக்குடித்தன ஸ்டோர்கள் ஆகியவையும் உடை மையாக இருந்தன. அதனால் அவர் ஊரறிந்த பிரமுகராயிருந்தார். சுதர் சனனுக்கு எங்கே உத்தியோகம், என்ன மாத வருமானம்
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/225
Appearance