பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 பொய்ம் முகங்கள் என்றுகூட இரண்டொரு தடவை ஜாடை மாடையாகக் கேட்டுச் சரியான பதில் கிடைக்காமல் ஏமாந்து போனார் அவர் சரியான வேலையில்லாதவர்களையும், இனிமேல்தான் வேலை தேடவேண்டும் என்ற நிலையிலுள்ளவர்களையும் அவர் பெரும்பாலும் அறைகளில் வாடகைக்கு இருக்க அனுமதிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களை இருக்க அது மதிப்பது நஷ்ட வியாபாரம் என்பது அவர் கருத்து. தான் ஒரு வேலை தேடிக் கொண்டிருப்பதாகச் சுதர்சனன் அவருக்குத் திட்டவட்டமாகப் பதில் கூறிவிட்டான். உண்மையும் அதுதான். தன்மானத்திற்கும் சுயமரியாதைக் கும் இழுக்கு வராத வேலை ஒன்றைத் தேடியாக வேண்டிய அவசியம் அப்போது அவனுக்கும் இருந்தது. அறையில் மருந்துக் கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதிக்காக நாள் தவறாமல் காலையில் இந்துப் பேப்பர் வந்துவிழுந்து கொண்டிருந்தது. டூரிலிருந்து திரும்பியதும் ஒருநாள் பேப்பர் கூட விடாமல் மொத்தமாக உட்கார்ந்து படிப்பது அவர் வழக்கமாம். ஆறை அண்ணாதாசன் ஆங்கில நாளேடுகளைத் தன் கைகளாலும் தொடுவதில்லை. பிற மொழிகள் மேல் அத்தனை வெறுப்பு. - காலை வேளைகளில் சுதர்சனன் அறையில் இந்து வந்து விழுந்ததும் எடுத்துப் பார்ப்பதுண்டு. ஒருநாள் அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தபோது எஜூகேஷனல் பகுதியில் "வாண்டட் காலத்தில் சென்னை நகரின் வடக்குப்பகுதி உயர் நிலைப்பள்ளி ஒன்றிற்குத் தமிழ்ப்பண்டிதர் தேவை என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அவசரமோ என்னவோ தெரியவில்லை. உடனே விண்ணப்பிக்கவும் அல்லது முடிந்தால் நேரில் வரவும் என்கிற பாணியில் அந்த விளம்பரம் இருந்தது. ஏறக் குறையத் திருவொற்றியூருக்குப் பக்கமாக இருந்த அந்தப் பள்ளிக்கூடத்திற்குத் தினசரி திருவல்லிக்கேணியிலிருந்து போய் வருவதற்கே மாதம் ஐம்பது அறுபது ரூபாய்க்குக்