226 - பொய்ம் முகங்கள் ஒரு கோடி மகாத்மாக்களும், சீர்திருத்தவாதிகளும் ஒரே சமயத் திலே பிறந்து முயற்சி பண்ணினாக்கூட இந்தியாவைத் திருத்த முடியாது சார்! இங்கே ஒவ்வொரு ஜாதிக்காரனுக்கும் அவனுக்கு வேணும்னு வசதியாயிருக்க றப்ப ஜாதி வேணும். அவனுக்கு வேணாம்கிறப்பவோ அசெளகரியமாயிருக்கறப்பவோ ஜாதி ம த ம் லாம் வேண்டாம். . . - х இந்த ஜாதி மத் விவகாரங்களிலே ரொம்பச் சீரழிஞ்சு போய் ஊழலாயிருக்கிறது கல்வித்துறைதான். கல்வித்துறை. யிலே இருக்கிற மாதிரி ஜாதிமத வெறி வேறெந்தத் துறை யிலேயும் இப்பிடி நாத்தம் எடுத்துக் குமட்டற அளவுக்கு இல்லேன்னே சொல்லலாம். - V. - - ஜாதி வ்ேனாம், மதம் வேணாம். ஏற்றத்தாழ்வு வேணாம்னு எல்லோரும் மேலுக்குச் சொல்விக்கிட்டு உள்ளுற நம்மை தாமே ஏமாத்திக்கிறோம். ஜாதியாலே நமக்கு வர்ர கெடுதலையும் கஷ்டத்தையும் சந்திக்கிறப்போ ஜாதி வேணாம்கிறோம். ஜாதியாலே நமக்கு வர்ர நன்மை யையும், வசதிகளையும் புரிஞ்சுக்கறப்போ ஜாதி வேணும்னு உள்ளுற ஏத்துக்கிட்டு வரவேற்கிறோம். இதுதான் நம்ம தேசம். வித்தியாசங்களை ஒழிக்கிறதுங்கறது இன்னும் இங்கே தொலைதுாரத்து லட்சியம் தானே ஒழிய நடை முறையாகிவிடவில்லை. வரவர ரெட்டை வேஷம் போட றங்கறதே நம்ம தேசிய கலாசாரங்கள்ளே ஒண்ணா சுதர்சனன் இதற்குப் பதில் எதுவும் கூறவில்லை. அவரே மேலும் தொடர்ந்தார்: . . . . . ... . செங்குந்தர் இல்லேன்னு உங்களை ஒத்துக்காமே உங் களுக்கு இப்போ வேலை கெடைச்சிட்டாலும் வேற ஒரு சங் கடம் இருக்கு. நான் சொன்னேன்னு யார் கிட்டேயும் காமிச்சுக்காதீங்க. நானூறு ரூபாய்க்குக் கையெழுத்துப் போட்டீங்கன்னா முந்நூறு ரூபாய்தான் கையிலே கிெடைக்
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/228
Appearance