உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 227 கும். , அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கையிலே கெ டைக் சுெறதுக்கு முன்னாடியும் ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் செல. வழிச்சாக வேண்டியிருக்கும். - நீங்க எல்லாருமே அந்த மாதிரித்தான் வேலைக்குச் சேர்ந்திங்களா? ஒருத்தருக்காவது லஞ்சம் குடுக்கறது தப்புன்னு படவியா?" * - - என்ன செய்யிறது: ஜனநாயக சோஷலிஸ் சமூகத்தை அமைக்கிற ஜாதி மதச் சார்பற்ற நாட்டிலே இத்தனை லஞ்சமும் கொடுத்தப்புறம்தான் வேலை கெடைக்குது. வெறும் நேர்மையையும் தகுதிய்ையும் ஒழுக்கத்தையும் எவன் மதிக்கிறேங்கறான்?' . . . . . 'லஞ்சம் கேட்கிறவனையும், குடுக்கிறவனையும் நடுத் துெருவிலே நிறுத்தி வச்சுச் சுட்டுடனும். அப்பிடி உடனே சுடற்த்துக்குக்கூட எதினாச்சும் 1லம்திங் குடுத்தாத்தான் முடியும்.' - இதைக் கேக்கறப்ப உங்க மேலே கோபமா இருந் தாலும் நீங்க சொல்றதென்னவோ நிஜந்தான்." லஞ்சம் வாங்கறவன் குடுக்கறவனை எல்லாம் சுடற துன்னு வந்தா அப்புறம் இந்தத் தேசத்துலே ஒருத்தன் மீத மிருக்க மாட்டான். இதை ரெண்டையும் செய்யாத ஆள் கெடைக்கறதே கஷ்டம். வாங்கிப் பழகின கையைவிட லஞ்சம் குடுத்துப் பழகின கைதான் இங்கே அதிகம்.' 'சாகறதுக்கு ஒண்ணுக்கு மட்டும்தான் இங்கே லஞ்சம் கிடையாதுன்னு நெனைக்கிறேன்.' "யார் சொன்னாங்க? அதுக்கும் கூட உண்டு, கிருஷ்ணாம் பேட்டை, கண்ணம்மா பேட்டை, ஓட்டேரி எல்லா மயானத்திலும் பொணம் உள்ளே நல்ல எடமாப் பிடிக்கக் கார்ப்பொரேஷன் சார்பில் வேலை பார்க்கி ற சுடுகாட்டுப் பிரதிநிதிக்கும் ஸ்ம்திங் உண்டு. லஞ்சமில் லாத விஷயம் எதுவும் இங்கே கிடையாது." -